சென்னை மெரினா லூப் சாலையில் நடப்பட்டுள்ள பனை மரக்கன்றுகளுக்கு சொட்டுநீர் பாசனம் மூலம் விடப்படும் நீர். (அடுத்தபடம்) சொட்டுநீர் பாசன கட்டமைப்பு. 
சுற்றுச்சூழல்

சென்னை - மெரினாவில் பனைமர கன்றுகளை பராமரிக்க சொட்டுநீர் பாசனம்!

செய்திப்பிரிவு

சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கரையில் நடப்பட்டுள்ள பனை கன்றுகளை பராமரிக்க சொட்டுநீர் பாசனம் மூலம் நீர் பாய்ச்சப்படுகிறது. சென்னை மாநகரின் பசுமை பரப்பை அதிகரிக்க, பல்வேறு இடங்களில் ஏராளமான மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறது மாநகராட்சி. அதன் ஒரு பகுதியாக மெரினாவில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் வரை, கடலரிப்பை தடுக்கும் விதமாக பனை விதைகளை நட திட்டமிட்டிருந்தது. அதன்படி, அண்மையில் 200 பனை விதைகள் நடப்பட்டுள்ளன.

அவை தற்போது முளைத்து வளர தொடங்கியுள்ளன. அவற்றை நீர் ஊற்றி பராமரிக்கும் விதமாக அங்கு சொட்டு நீர் பாசன கட்டமைப்பையும் மாகநராட்சி நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “இதன்மூலம், இந்த பனை மரக்கன்றுகள் ஒவ்வொன்றுக்கும் நீரை கொண்டு சென்று ஊற்றி பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை.

சொட்டுநீர் பாசனம் மூலம் தானாகவே, தேவையான நீர் சென்றடையும்” என்று தெரிவித்தனர். மேலும், அவற்றை கால்நடைகளிடம் இருந்து பாதுகாத்து வளர்க்கும் விதமாக மாநகராட்சி சார்பில் கம்பி வலைகளை கொண்ட தடுப்புகள் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT