சுற்றுச்சூழல்

தண்ணீரை ஏன் வீணாக்கக் கூடாது? | உலக தண்ணீர் தினம்

ராகா

* நம் பூமி 71% நீரால் நிரம்பியது என்றாலும், இதில் 3% மட்டுமே சுத்தமான நீர். இதிலும் 1% நீர் மட்டுமே மனிதர்கள் பயன்பாட்டுக்காகக் கிடைக்கிறது. மீதம் 2% நீர் பனிக்கட்டிகளாக உறைந்து இருக்கிறது. மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் என அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ நீர் இன்றியமையாதது என்பதால் எப்போதும் நீரை வீணாக்கக் கூடாது.

* நீரைச் சேமிக்காமல் வீணாக்கும்போது போதுமான நீர் கிடைக்காமல் பற்றாக் குறை உண்டாகலாம். நீர் பற்றாக்குறையினால் விவசாயம் செய்வதில், பொருளைத் தயாரிப்பதில், தொழிற்சாலைகள் போன்றவை இயங்குவதில் பாதிப்பு ஏற்படும்.

உற்பத்தி பாதிக்கப்படும்போது பொருள்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டு, நாம் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசியப் பொருள்களுக்கான விலை பெரும்பாலும் அதிகமாகும். எனவே தண்ணீரை வீணாக்க வேண்டாம்.

* ’சிறுதுளி பெரு வெள்ளம்’ என்பது பழமொழி. இந்தப் பழமொழிக்கு ஏற்ப இன்று சேமிக்கப்படும் சிறுதுளி நீரும் நாளை எதிர்காலச் சந்ததியினருக்குப் பயனுள்ளதாக அமையும். வீட்டில், பள்ளியில், பொது இடங்களில் என எங்கு சென்றாலும் நீரை வீணாக்காமல் பொறுப்போடு பயன்படுத்த வேண்டும்.

* தாவரங்கள், காட்டுயிர்கள் வாழவும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் பாதுகாக்கவும் தண்ணீர் அவசியம். இதனால் தண்ணீரை வீணாக்காமல் இருப்பது நல்லது.

* சுத்தமான நீரில் கலப்படம் செய்வதாலும் நீர் வீணாக்கப்படுகிறது. குப்பைகளைக் கொட்டுவது, நச்சுப் பொருள்களைக் கலப்பது போன்ற செயல்களால் நீர் மாசுபடும். கலப்படமான நீரால் நோய்கள் பரவும், உயிரினங்கள் பாதிப்படையும்.

| மார்ச் 22 - உலக நீர் நாள் |

SCROLL FOR NEXT