சுற்றுச்சூழல்

உதகையில் பூத்த சிவப்பு பிரம்ம கமலம்

செய்திப்பிரிவு

உதகை குல்முகமது சாலை பகுதியில் உள்ள ஜாகீரா என்பவரது வீட்டில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கக்கூடிய பிரம்மகமலம் பூ பூத்தது. இவரது வீட்டுத் தோட்டத்தில் அரிய வகை நிஷா காந்தி எனப்படும் பிரம்மகமலம் கள்ளிச்செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலும் இவ்வகை மலர்கள் வெள்ளை நிறத்தில் மட்டுமே பூக்கக்கூடிய நிலையில், தற்போது இளஞ்சிவப்பு நிறத்தில் பூத்துள்ளது.

இதுகுறித்து ஜாகீரா கூறும்போது, ‘‘தென் அமெரிக்கா நாட்டின் மெக்சிகோ காடுகளை பிறப்பிடமாகக் கொண்ட பிரம்ம கமலம், இலங்கை நாட்டில் சொர்க்க பூ என அழைக்கப்படுகிறது. மலர்களின் இளவரசி என்றும் அழைக்கப்படும் பிரம்ம கமலம், உதகையில் எங்கள் வீட்டில் பூத்துள்ளதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்துச் செல்கின்றனர்’’ என்றார்.

SCROLL FOR NEXT