கூடலூரில் சாலையைக் கடக்க முயன்றபோது இருசக்கர வாகனம் மோதி மயக்கமடைந்த சிறுத்தை 
சுற்றுச்சூழல்

கூடலூரில் சாலையை கடக்கும்போது பைக்கில் மோதி மயங்கிய சிறுத்தை! 

ஆர்.டி.சிவசங்கர்

கூடலூர்: கூடலூரில் இருந்து கேரளா செல்லும் சாலையில் திடீரென சாலையைக் கடந்த சிறுத்தை மீது இரு சக்கர வாகனம் மோதியது. இதனால் மயங்கிய நிலையில் கிடந்த சிறுத்தை சிறிது நேரம் கழித்து எழுந்து வனப்பகுதிக்குள் சென்றது.

நீலகிரி மாவட்டத்தில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது வனப்பகுதியை ஒட்டியுள்ள சாலை ஓரங்களில் சர்வ சாதாரணமாக சிறுத்தைகளை காண முடியும். வியாழக்கிழமை காலை கூடலூரில் உள்ள இரும்பு பாலம் அருகே ஒருவர் இரு சக்கர வாகனம் ஓட்டி வரும் போது சிறுத்தை ஒன்று குறுக்கில் வந்தது. அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டி திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதில், சிறுத்தை இருசக்கர வாகனத்தில் அடிப்பட்டு ரோட்டில் விழுந்தது. சிறிது நேரம் அசைவற்று சிறுத்தை படுத்துக் கிடந்தது.

இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் சிறிது நேரம் ரோட்டில் படுத்திருந்த சிறுத்தை திடீரென எழுந்து காட்டுக்குள் ஓடியது. சிறுத்தை உயிர் பிழைத்து ஓடியதை பார்த்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த ராஜேஸ் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுத்தையை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT