இந்தூர்: நாடு முழுவதும் 140 கோடி மரக் கன்றுகளை நட வேண்டும் என பிரதமர் மோடி சமீபத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதன் ஒரு பகுதியாக மத்திய பிரதேசத்தில் 55 மாவட்டங்களில் 5.5 கோடி மரக்கன்றுகள் நடப்படும் என அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் மற்றும் அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா ஆகியோர் தெரிவித்திருந்தனர்.
இதில் இந்தூர் மாவட்டத்தில் 51 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 11 லட்சம் மரக்கன்றுகளை அதானி குழுமம் வழங்கி உள்ளது. இந்தூரின் பசுமை மண்டலத்தில் பல்லுயிர் பெருக்கத்தை உருவாக்க உதவும் 25 வெவ்வேறு இன மரக்கன்றுகள் இதில் அடங்கும்.