சுற்றுச்சூழல்

சாலையில் வலம் வந்த 8 அடி நீள முதலை - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி | மகாராஷ்டிர வீடியோ வைரல்

செய்திப்பிரிவு

மும்பை: மகாராஷ்டிராவில் சாலையில் சுற்றித் திரிந்த 8 அடி நீளம் கொண்ட முதலையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிர மாநிலம், ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள சிப்லுன் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள ஆறுகளின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக சிப்லுன் சாலையில் 8 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று உலா வந்தது.

அதனை காரில் இருந்தபடி வாகன ஓட்டி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த முதலை அருகிலுள்ள ஷிவ் அல்லது வசிஷ்டி நதிகளில் இருந்து நகருக்குள் நுழைந்திருக்கலாம் என்று அதிகாரி ஒருவர் கூறினார். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்ததாக உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT