சுற்றுச்சூழல்

திரிபுராவில் உயிருக்குப் போராடிய யானைகளை காப்பாற்றிய ஆனந்த் அம்பானியின் ‘வன்தாரா’

செய்திப்பிரிவு

ஜாம்நகர்: திரிபுராவில் உடல்நலம் குன்றி இருந்த யானையையும் அதன்குட்டியையும் ஆனந்த் அம்பானியின் ‘வன்தாரா’ அணி விரைந்து சென்று காப்பாற்றியுள்ளது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் விலங்குகளை பாதுகாப்பதற்கென்று ‘வன்தாரா’திட்டத்தை முன்னெடுத்துள்ளது. காயம்பட்ட, உடல்நலம் குன்றிய, கைவிடப்பட்ட விலங்குகளை மீட்டுஅவற்றை பாதுகாக்கும் பணியை ‘வன்தாரா’ மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் திரிபுராவில் உனகோடி மாவட்டத்தில் யானையும் அதன் குட்டியும் உடல்நலம் குன்றி உயிருக்குப் போராடுவதாக வந்த தகவலையடுத்து ‘வன்தாரா’ அணியினர் குஜராத் மாநிலம் ஜாம்நகரிலிருந்து 3,400 கிமீ தொலைவில் உள்ள திரிபுரா மாநிலத்துக்கு சென்று அந்த யானைகளுக்கு சிகிச்சை வழங்கி காப்பாற்றியுள்ளனர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிவைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் ஆனந்த் அம்பானியின் ‘வன்தாரா’ குழு எப்படி 24 மணி நேரத்தில் 3,400 கிமீ கடந்து வந்து யானையை மீட்டது என்பது குறித்து பெண் ஒருவர் பேசுகிறார்.

“யானைகள் உடல்நலம் குன்றி உயிருக்குப் போராடுவதாக நான் ‘வன்தாரா’ அமைப்புக்கு மின்னஞ்சல் செய்தேன். மறுநாளே அந்த அணியினர் இங்கு வந்துயானைக்கு சிகிச்சை வழங்கியுள்ளனர்.

இதற்காக நான் ஆனந்த் அம்பானிக்கு என் உள்ளத்தில் இருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். யானைகளைக் காப்பாற்ற உதவிய அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அந்தப் பெண் தெரிவித்துள்ளார். குஜராத்தில் அமைந்துள்ள ‘வன்தாரா’வில் 3,000 ஏக்கர் பரப்பளவில் யானைக்கான மீட்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. 200-க்கும் மேற்பட்ட யானைகள் மற்றும் ஆயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் மீட்கப்பட்டு இங்கு பாதுகாக்கப்படுகின்றன.

SCROLL FOR NEXT