பிரதிநிதித்துவப் படம் 
சுற்றுச்சூழல்

வெப்ப பதிவில் மீண்டும் முதல் இடம் - ஈரோடு மக்களை 3-வது நாளாக ஏமாற்றிய மழை

செய்திப்பிரிவு

ஈரோடு: வானிலை மைய அறிவிப்பின்படி, 3-வது நாளாக கனமழையை எதிர்பார்த்து இருந்த ஈரோடு மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களாக 100 டிகிரியை கடந்து வெப்பம் பதிவாகி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 27 நாட்கள் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. ஈரோட்டில் கடந்த 7-ம் தேதி முதல் தொடர்ச்சியாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்து இருந்ததால், ஈரோடு மக்கள் மழையை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், 7-ம் தேதியும், 8-ம் தேதியும் சாரல் மழை மட்டும் பெய்ததால் ஈரோடு மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

மழைக்கு பதிலாக கடந்த 7-ம் தேதி 105 டிகிரியும், 8-ம் தேதி 106 டிகிரியும் வெப்பநிலை பதிவானது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் (9-ம் தேதி) ஈரோட்டில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்து இருந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கன மழை பெய்து, குளிர்ச்சியான சூழல் ஏற்பட்ட நிலையில், ஈரோட்டில் நேற்று வழக்கம் போல் கோடை வெயில் கொளுத்தியது. ஈரோடு மற்றும் கரூர் பரமத்தியில், தமிழகத்திலேயே அதிகபட்சமாக 107 டிகிரி வெப்பம் பதிவானது.

SCROLL FOR NEXT