பிரதிநிதித்துவப் படம் 
சுற்றுச்சூழல்

வறண்டு வரும் கோடை கால நீர்த்தேக்கம்: பழநியில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

செய்திப்பிரிவு

பழநி: பழநி நகராட்சி கோடை கால நீர்த்தேக்கம் வறண்டு வருவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பழநி நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக கொடைக்கானல் சாலையில் உள்ள கோடை நீர்த்தேக்கம் மற்றும் பாலாறு பொருந்தலாறு அணை உள்ளது. கோடை காலம் தொடங்கி விட்டதால் பழநி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குளங்கள், கண்மாய் உள்ளிட்ட நீர் நிலைகள் வறண்டு வருகின்றன. கோடை மழை பெய்யாததால் நகராட்சி கோடை நீர்த்தேக்கத்தில் தண்ணீர் படிப்படியாக குறைந்து வறண்டு வருகிறது. மணல் பரப்பு வெளியே தெரிகிறது.

இதனால் நீர்த்தேக்கத்தில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படும் வார்டுகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பழநி அடிவாரம் பகுதியில் உள்ள 8 வார்டுகளுக்கு குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, வெயில் மற்றும் மழை இல்லாததால் கோடை கால நீர்த்தேக்கத்தில் தண்ணீர் குறைந்து வருகிறது. குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க பாலாறு பொருந்தலாறு அணையில் தண்ணீர் பெறப்பட்டு விநியோகிக்கப்படும் என்று கூறினர்.

SCROLL FOR NEXT