சுற்றுச்சூழல்

செங்கல்பட்டு | உலக பூமி தினத்தை முன்னிட்டு 1 கிமீ பதாகைகளுடன் நடந்து சென்று விழிப்புணர்வு

செய்திப்பிரிவு

செங்கல்பட்டு: மறைமலை நகர் அருகே உலக பூமி தினத்தையொட்டி சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்த, பதாகைகளுடன் நடந்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய சிறுமியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

உலகம் முழுவதும், ஏப்ரல் 22-ம்தேதி உலக பூமி தினமாக கொண்டாடப்படுகிறது. கடந்த 1970-ம் ஆண்டு முதல் பூமி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் பூமியின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் மற்றும் பூமி மாசடைவதை தடுக்கும் வகையிலும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரை அடுத்த திருக்கச்சூர் பகுதியில் வசித்து வரும் கார்த்திகேயன் என்பவரின் மகள் சாமினி(9).

இவர், தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், உலக பூமி தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் நேற்று பதாகைகளுடன் சுமார் 1 கிலோமீட்டர் தொலைவுக்கு நடந்து சென்றும், அவரது வீட்டில் மரக்கன்று நட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சிறுமியின் இந்த செயலை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.

SCROLL FOR NEXT