மதுரையில் மீட்கப்பட்ட ஐரோப்பிய நாட்டு ஆந்தையுடன் தீயணைப்பு துறையினர். 
சுற்றுச்சூழல்

மதுரையில் பிடிபட்ட ஐரோப்பிய நாட்டு ஆந்தை!

செய்திப்பிரிவு

மதுரை விளாங்குடி பகுதியிலுள்ள தனியார் குடியிருப்பில் விநோதமான பறவைகள் சுற்றி திரிவதாக தல்லாகுளம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து தீயணைப்பு நிலைய அலுவலர் அசோக் குமார் தலைமையில் வீரர்கள் அங்கு சென்றனர். குடியிருப்பு வளாகத்தில் சுற்றிய 2 ஆந்தைகளை லாவகமாகபிடித்தனர். ஆய்வில் அவை ஐரோப்பாவை சேர்ந்த ஆந்தைகள் எனத் தெரிந்தது. அவற்றை வனத்துறை யினரிடம் ஒப்படைத்தனர்.

SCROLL FOR NEXT