சுற்றுச்சூழல்

குன்னூரில் 8 நாட்களுக்கு பிறகு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட காட்டுத் தீ

செய்திப்பிரிவு

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஃபாரஸ்ட் டேல் பகுதியில் கடந்த 8 நாட்களாக காட்டுத் தீ பற்றி எரிந்து வந்தது. இதில் 60 ஏக்கர் பரப்பளவுக்கு மேல் மரங்கள் மற்றும் செடி, கொடிகள் தீயில் கருகின‌.

வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் சார்பில் குன்னூர், கோத்தகிரி, உதகை, கூடலூர் ஆகிய பகுதிகளில் இருந்து பணியாளர்கள் 150 பேருக்கும் மேல் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். கோவை மாவட்டம் சூலூரிலிருந்து விமானப்படை ஹெலிகாப்டரும் வரவழைக்கப்பட்டு, ரேலியா அணையிலிருந்து மொத்தம் 14 சுற்று தண்ணீர் எடுத்து தீயை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தற்போது, காட்டுத் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், புகை உள்ள பகுதிகளில் வனத்துறை, மற்றும் தீயணைப்பு ஊழியர்கள் தண்ணீர் ஊற்றி தீ பரவாமல் அணைத்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT