சுற்றுச்சூழல்

சிவகங்கை சாதனை முயற்சி: ஒரே நேரத்தில் லட்சம் மரக்கன்றுகள் நடவு

செய்திப்பிரிவு

சிவகங்கை: ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை யொட்டி, சிவகங்கை அருகே வாணியங்குடி ஊராட்சியில் சாதனை முயற்சியாக ஒரே நேரத்தில் ஒரு லட்சத்து நூறு மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்நிகழ்ச்சியை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து நூறு நாள் திட்ட தொழிலாளர்கள், தன்னார்வலர்கள், அலுவலர்கள் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சிவராமன், ஊராட்சித் தலைவர் புவனேஸ்வரி, ஒன்றிய கவுன்சிலர் கோவிந்த ராஜன், திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கை மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடவு செய்யப்பட்ட மரக் கன்றுகளை தண்ணீர் ஊற்றி தொடர்ந்து பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஊராட்சித் தலைவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT