உதகை: நீலகிரி மாவட்டத்தில் தற்போது வறட்சி காலம் தொடங்கியுள்ளது. வனப்பகுதியில் விலங்குகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், அவை கிராமப் பகுதிக்குள் நுழைவது தொடர்கதை ஆகியுள்ளது.
இந்நிலையில், உதகை நகருக்குள் நேற்று முன்தினம் இரவு கரடி நுழைந்தது. வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து, அங்கிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக ஜி-1 காவல் நிலைய வளாகத்துக்குள் புகுந்து, மீண்டும் அப்பகுதியில் இருந்து வெளியேறி ஸ்டேட் பேங்க் காலனி மற்றும் குடியிருப்பு சாலைகளில் உலா வந்தது. அதிகாலை வரை உதகை நகரில் சுற்றித்திரிந்து, பின்னர் வனப்பகுதிக்குள் சென்றுள்ளது. கரடி நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.