ஓசூர் சானமாவு பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள். 
சுற்றுச்சூழல்

ஓசூர் சானமாவு வனத்தில் 8 யானைகள் முகாம்: வாகனங்களை மெதுவாக இயக்க வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

ஓசூர்: ஓசூர் சானமாவு வனத்தில் 8 யானைகள் முகாமிட்டுள்ளதால், வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானமாவு வனப்பகுதியில் தற்போது 8 யானைகள் முகாமிட்டுள்ளன. இப்பகுதி மாநில நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளதால், யானைகள் அடிக்கடி கடந்து செல்கின்றன. இதனால், இவ்வழியே வாகனங்கள் அதிவேகமாக செல்லக்கூடாது. மெதுவாக இயக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பாமல் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும், இரவு நேரங்களில் வனத்தை ஒட்டியுள்ள விளை நிலங்களுக்கு காவலுக்கும், ஆடு, மாடுகளை மேய்க்கவும், விறகுகள் எடுக்கவும் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை, வனத்துறையினர் கண்காணித்து, தேன்கனிக்கோட்டை வனத் திற்கு விரட்டி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT