சுற்றுச்சூழல்

தாம்பரம் அருகே இரண்டடி முதலை குட்டி சிக்கியது

செய்திப்பிரிவு

தாம்பரம்: தாம்பரத்தை அடுத்த நெடுங்குன்றம், ஆலப்பாக்கம் பகுதிகளில் உள்ள ஏரிகளில் இருந்து முதலைகள் வெளியேறி சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் உலா வருவது வழக்கம். கடந்த மழையின்போது முதலைகள் சில குடியிருப்பு பகுதிகளில் புகுந்தன. அதில் ஒரு முதலை கடந்த சில நாட்களுக்கு முன்பு பிடிபட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 11:30 மணி அளவில் ஆலப்பாக்கத்தில் இருந்து எஸ்எஸ்எம் நகர் செல்லும் சாலையில் சுமார் 2 அடி அளவு கொண்ட முதலைக் குட்டி இருக்கும் தகவல் வனத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. கிண்டி வனத்துறை அதிகாரிகள் முதலைக்குட்டியை மீட்டு, கொண்டு சென்றனர்.

SCROLL FOR NEXT