மேட்டுப்பாளையம் அருகே விவசாய கிணற்றில் இருந்து வனத்துறை யினர் மூலம் மீட்கப்பட்ட முதலை. 
சுற்றுச்சூழல்

விவசாய கிணற்றில் இருந்த முதலையை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர் @ ஓடந்துறை

செய்திப்பிரிவு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அடுத்துள்ள ஓடந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி மூர்த்தி. இவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் விவசாயத்துக்கு நீர் எடுக்கும் போது முதலை இருப்பது தெரியவந்தது.

தகவல் அறிந்த சிறுமுகை வனத் துறையினர், முதலையை கூண்டு வைத்து பிடிக்க முடிவு செய்தனர். இதனையடுத்து, ராட்சத மின் மோட்டார்களை கொண்டு கிணற்றில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு, வனத் துறையினர் கொண்டு வந்த கூண்டு கிரேன் மூலம் கிணற்றில் இறக்கப் பட்டது.

கிணற்றில் இருந்து நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், அங்கும் இங்குமாக கிணற்றில் சுற்றிய முதலை, பின்னர் கூண்டில் சிக்கியது. மீட்கப்பட்ட முதலையை பவானிசாகர் அணையின் நீர் தேக்க பகுதிக்கு கொண்டுசென்று வனத்துறையினர் விடுவித்தனர். மேட்டுப்பாளையம் பகுதியில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியபோது முதலை அடித்து வரப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT