காக்கைகளிடம் சிக்கி காயமடைந்த குயில்களை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்த சிறுவன் 
சுற்றுச்சூழல்

காக்கைகளிடம் சிக்கி காயமடைந்த குயில்களை மீட்ட சிறுவனுக்கு பாராட்டு

செய்திப்பிரிவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வன விலங்குகள், பறவைகள் வாழ்வதற்கு உரிய சூழ்நிலை இருப்பதால் இங்கு ஏராளமான விலங்குகள், பறவைகள் வசித்து வருகின்றன.

மேலும், சீசன் நேரத்தில் வெளிநாட்டு பறவைகளும் இங்கு தங்கி செல்வதுண்டு. மலை அடிவாரத்திலுள்ள அங்கலகுறிச்சி கிராமத்தில் உள்ளூர் மற்றும் சீசனுக்கு வரும் பறவைகள் அதிக அளவில் காணப்படுகின்றன.

இந்நிலையில், அங்கலக்குறிச்சி பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் சந்தோஷ் குமார் எனும் மாணவர், நேற்று காலை சாலையில் சென்று கொண்டிருந்த போது, காக்கைகள் விரட்டி தாக்கியதில் இரண்டு குயில்கள் காயமடைந்து பறக்க முடியாமல் கீழே விழுந்ததை பார்த்துள்ளார்.

காக்கைகளை விரட்டி விட்ட சந்தோஷ் குமார், காயங்களுடன் கிடந்த 2 குயில்களை மீட்டு ஆழியாறு சோதனை சாவடியில் வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். குயில்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த வனத்துறையினர், பின்னர் வனப்பகுதியில் பறக்கவிட்டனர். தகுந்த நேரத்தில் குயில்களை மீட்டு ஒப்படைத்த சிறுவனுக்கு வனத்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT