கோப்புப்படம் 
சுற்றுச்சூழல்

காற்று மாசு விளைவால் ஆயுட்காலத்தில் 5.3 ஆண்டுகளை இழக்கும் இந்தியர்கள்: ஆய்வில் தகவல்

செய்திப்பிரிவு

சிகாகோ: காற்று மாசு விளைவின் காரணமாக இந்தியர்கள் சராசரியாக தங்கள் ஆயுட்காலத்தில் 5.3 ஆண்டுகளை இழப்பதாக ஆய்வு முடிவு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்று மாசினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள உலக நாடுகளில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க நாட்டில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தின் எனர்ஜி பாலிசி இன்ஸ்டிடியூட் சார்பில் அப்டேட் செய்யப்பட்ட Air Quality Life Index (AQLI) ஆய்வினை மேற்கொண்டுள்ளது. அதில்தான் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. இந்தியாவில் சுமார் 1.3 பில்லியன் மக்கள், உலக சுகாதார மையத்தின் காற்றின் தரத்தை கடந்துள்ள பகுதிகளில் வசிப்பதாகவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசம், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகள் காற்று மாசு அதிகம் நிறைந்த நாடுகளில் முதல் 5 இடங்களில் உள்ளது. அதேபோல தலைநகர் டெல்லி, குருகிராம், ஃபரிதாபாத், ஜானுபூர் (உ.பி), லக்னோ, கான்பூர், பாட்னா ஆகிய நகரங்களில் காற்று மாசு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT