புதுச்சேரி: கோடை காலம் நிறைவடைந்த பிறகும், புதுச்சேரியில் தொடர்ந்து வெயின் தாக்கம் அதிகரித்து, சதம் அடித்து வருகிறது. இந்நிலையில் முதலாவது புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புதுவையில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கோடை வெயில் கொளுத்தியது. அதன்பின் வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி காரணமாக ஜூன் இறுதியில் மழை பெய்தது. இதனால் கோடை வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்தது. பின்னர் தினமும் மாலை யில் மிதமான மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் மேலும் குறைந்து குளிர்ச்சியான வானிலை நிலவியது.
கடந்த ஒரு வாரமாக மழை குறைந்து, மேற்கு திசை நோக்கிச் செல்லும் காற்றின் வேகம் கார ணமாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் நாள்தோறும் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகிறது. அனல்காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
வெப்பத்தின் தாக்கம் நேற்றும் அதிகளவில் இருந்தது. இரவிலும் வெப்பச்சலனம் நிலவுகிறது. இதனால் மக்கள் புழுக்கத்தால் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வரும் 5-ம் தேதி வரை புதுவையில் ஓரிரு இடங்களில் அதிக வெப்பநிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை: இச்சூழலில், வடகிழக்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, வடமேற்கு நோக்கி நகர்ந்து, கெபுபாரா அருகே வங்கதேச கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது மேற்கு -வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்பதால் 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண்புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப் பட்டுள்ளது.
புயல் உருவாகக்கூடிய திடீர் காற்றோடு கூடிய மழை உள்ள வானிலை பகுதி என்பதை குறிக்கும் வகையில் சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம் பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப் பட்டுள்ளது.