கல்வி

டிப்ளமோ படித்து பணியில் இருப்பவர்கள் பகுதி நேர பிஇ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: ​பாலிடெக்​னிக் டிப்​ளமோ படித்து பணி​யில் இருப்​பவர்​கள், பகுதி நேர பிஇ படிப்​பில் சேர விண்​ணப்​பிக்​கலாம் என, தொழில்​நுட்​பக் கல்வி இயக்​ககம் அறி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக, தொழில்​நுட்​பக் கல்வி இயக்​குநர் பி.ரத்​தின​சாமி நேற்று வெளி​யிட்ட அறி​விப்​பு: தொழில்​நுட்​பக் கல்வி இயக்​ககத்​தின் கட்​டுப்​பாட்​டின் கீழ் இயங்​கும் 6 அரசு பொறி​யியல் கல்​லூரி​கள் மற்​றும் 2 அரசு உதவி பெறும் பொறி​யியல் கல்​லூரி​களில், நடப்பு கல்வி ஆண்​டில் (2026-27) பகுதி நேர பிஇ படிப்​பில் சேர ஆன்​லைனில் விண்​ணப்​பங்​கள் வரவேற்​கப்​படு​கின்​றன.

பொறி​யியல் டிப்​ளமோ படித்து வேலை​வாய்ப்பு பெற்று ஓராண்டு பணிபுரிந்த அல்​லது பணிபுரிந்து கொண்​டிருப்​போர் இதற்கு விண்​ணப்​பிக்க தகு​தி​யுடைய​வர் ஆவர். அவர்​கள் www.ptbe-tnea.com என்ற இணை​யதளத்தை பயன்​படுத்தி ஆன்​லைனில் விண்​ணப்​பிக்​கலாம். தேவை​யான சான்​றிதழ்​களை​யும் பதிவேற்​றம் செய்ய வேண்​டும். பதிவு கட்​ட​ணம் ரூ.900. எஸ்​சி, எஸ்டி வகுப்​பினருக்கு ரூ.450 மட்​டும்.

ஆன்​லைனில் விண்​ணப்​பிக்க கடைசி நாள் ஜூலை 12-ம் தேதி. கூடு​தல் விவரங்​களை மேற்​குறிப்​பிட்ட இணைய தளத்​தில் விரி​வாக அறிந்​து கொள்​ளலாம். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT