வேலூர்: கியூ.எஸ். உலகளாவிய பல்கலைக்கழகங்களின் பாடப்பிரிவு தரவரிசை பட்டியலில், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் விஐடி பல்கலைக்கழகம் உலகளவில் 119-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
உலகளாவிய உயர்கல்வி பகுப்பாய்வு நிறுவனமான ‘கியூ.எஸ்.’(குவாக்கரெல்லி சைமண்ட்ஸ்) 2026-ம் ஆண்டுக்கான உலக பல்கலைக்கழக பாடப் பிரிவு தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் வேலூர் விஐடி பல்கலைக்கழகம் 17 பாடப்பிரிவுகளில் உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றாக தேர்வாகி உள்ளது.
இதுகுறித்து விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் கூறியதாவது: கியூ.எஸ். உலக பல்கலைக்கழகங்களின் பாடப்பிரிவு தரவரிசைப் பட்டியலில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் விஐடி பல்கலைக்கழகம் கடந்த ஆண்டை விட23 இடங்கள் முன்னேறி உலகளவில் 119-ம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்திய அளவிலான தரவரிசையில் 6-ம் இடம். இதில், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் பாட பிரிவில் 86-வது இடமும், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் பாட பிரிவில் 87-வது இடமும் என 100 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளது.
அதேபோல், கணிதவியலில் 104-வது இடமும், தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு பாடத்தில் 101-200, மெட்டீரியல் சயின்ஸ் 137-வது இடமும் பிடித்துள்ளது. மெக்கானிக்கல், ஏரோநாட்டிகல் அண்ட் மேனுபேக்சரிங் பிரிவில் 148-வது இடமும் என 200 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளன.
கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் மற்றும் எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் பிரிவுகளில் 6-வது இடமும், தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு பிரிவில் 7-வது இடத்தையும் பிடித்துள்ளன.
ஆர்ட் அண்ட் மற்றும் டிசைன் 201-300, சிவில் என்ஜினீயரிங் பிரிவில் 201-275-ம் இடம் பிடித்துள்ளது.
கெமிக்கல் பாட பிரிவில் 201-250, வேதியியல் மற்றும் இயற்பியல், வானியல் பாட பிரிவுகளில் 251-300 தர வரிசையும், புள்ளியியல், செயல்பாட்டு ஆராய்ச்சியில் 251-275, பயாலாஜி கல் சயின்சஸ் 301-350, சுற்றுச்சூழல் அறிவியல் 351-400, மருத்துவ பாட பிரிவில் 551-600 தரவரிசையில் இடங்களை பிடித்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.