விஐடி சென்​னை​யில் நடந்த வைப்ரன்ஸ் சர்வ​தேச கலை விழா​வில் சாம்​பியன் பட்​டம் வென்ற சென்னை எஸ்​எஸ்​என்​ பொறி​யியல்​ கல்​லூரி ​மாணவர்​களுக்​கு கோப்​பை வழங்​கிய நடிகை ஸ்ரீலீலா, விஐடி நிறு​வனர்​ மற்​றும்​ வேந்​தர்​ கோ.​விசுவ​நாதன், விஐடி துணைத்​ தலைவர்​ ஜி.வி.செல்​வம்​.

 
கல்வி

விஐடி சென்னையில் ‘வைப்ரன்ஸ் 2026’ சர்வதேச கலை விழா

30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

பெ.ஜேம்ஸ்குமார்

மேலக்​கோட்​டையூர்: விஐடி சென்​னை​யில் ‘வைப்ரன்ஸ் 2026’ என்ற சர்​வ​தேச கலைத் திரு​விழா​வின் நிறைவு விழா நேற்று முன்​தினம் மாலை நடை​பெற்​றது. விஐடி நிறு​வனர் மற்​றும் வேந்​தர் முனை​வர் கோ.​விசுவ​நாதன் தலைமை வகித்​தார். விஐடி துணைத் தலை​வர் முனை​வர் ஜி.​வி.செல்​வம் முன்​னிலை வகித்​தார்.

சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்ற பிரபல நடிகை​யும், மருத்​து​வரு​மான ஸ்ரீலீலா பேசி​ய​தாவது: கல்​லூரி வாழ்க்கை அனை​வருக்​கும் முக்​கிய​மானது. மாணவர்​கள் தங்​கள் இலக்​கு​களில் தெளி​வாக இருக்க வேண்​டும். ஒவ்​வோர் ஆண்​டும் அல்​லது குறைந்​த​பட்​சம் கல்​லூரியை விட்டு வெளி​யேறும்​போ​தாவது என்​னென்ன விஷ​யங்​களை செய்ய விரும்​பு​கிறோம் என்று பட்​டியல் தயாரித்​து, அதன்​படி செயல்பட வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

          

விஐடி நிறு​வனர் மற்​றும் வேந்​தர் கோ.​விசுவ​நாதன் பேசும்​போது, “விஐடி நிறு​வனம் கல்​வி​யில் மட்​டுமல்ல, மாணவர்​களின் திறமை​களை வளர்ப்​ப​தி​லும் முன்​னிலை வகிக்​கிறது. மாணவர்​கள் அனை​வரும் நன்​றாகப் படித்​து, உள்​நாட்​டில் மட்​டுமின்​றி, உலக அளவில் தங்​களுக்​கான இடத்தை உறுதி செய்ய வேண்​டும்.

மாணவர்​களுக்கு சிறந்த வேலை​வாய்ப்பை வழங்​கி, உயர்ந்த நிலையை அடைய விஐடி உதவி வரு​வது மகிழ்ச்​சி​யளிக்​கிறது” என்​றார்.

எஸ்​எஸ்​என் கல்​லூரி சாம்பியன்: தொடர்ந்​து, ‘வைப்ரன்ஸ் 2026’ கலை விழா​வில் சாம்​பியன் பட்​டம் வென்ற சென்னை எஸ்​எஸ்​என் பொறி​யியல் கல்​லூரி மாணவர்​களுக்கு நடிகை ஸ்ரீலீலா, விஐடி வேந்​தர் கோ.​விசுவ​நாதன், துணைத் தலை​வர் ஜி.​வி.செல்​வம் ஆகியோர் கோப்பை வழங்​கினர்.

விழா​வில், விஐடி சென்னை இணை துணைவேந்​தர் டி.​தி​யாக​ராஜன், இயக்​குநர் சத்​தி​ய​நா​ராயணன், கூடு​தல் பதி​வாளர் பி.கே.மனோகரன் உள்​ளிட்​டோர் கலந்​து ​கொண்​டனர். முன்​ன​தாக, வைப்ரன்ஸ் விழாவை பளுதூக்கும் வீராங்​கானை டாக்​டர் ஆர்த்தி அருண் கடந்த 18-ம் தேதி தொடங்​கி​வைத்​தார்.

இசையமைப்​பாளர் சந்​தோஷ் நாராயணன், நடிகர் பிரேம்ஜி உள்​ளிட்​டோரின் இசை நிகழ்ச்​சிகள், கலை நிகழ்ச்​சிகள் மற்​றும் விளை​யாட்​டுப் போட்​டிகள் நடந்​தன. இந்​தியா மட்​டுமின்​றி, பிரேசில், ஜப்​பான், சிங்​கப்​பூர், தான்​சானி​யா, கம்​போடியா நாடு​களில் உள்ள கல்வி நிறு​வனங்​களை சேர்ந்த 30,000-க்​கும் மேற்​பட்ட மாணவகள் கலந்து கொண்​டனர்.

டென்ட் கொட்டகையில் அமர்ந்து உற்சாகத்துடன் திரைப்படத்தை கண்டுரசித்த மாணவர்கள்

மாணவர்களைக் கவர்ந்த டென்ட் கொட்டகை:

இந்த விழாவில் பழைய டென்ட் கொட்டகையை நினைவுகூரும் வகையில் ‘VIT Talkies’ என்ற கொட்டகை (திரையரங்கு) அமைக்கப்பட்டிருந்தது. மணல் பரப்பு, நாற்காலிகள் மற்றும் மேஜைகள் என்று 3 வகையான பிரிவுகளில் பார்வையாளர்கள் மற்றும் மாணவர்கள் அமரும் வகையில் இது தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தது.

டென்ட் கொட்டகையில் முதல் திரைப்படமாக எம்ஜிஆர் நடித்த மாபெரும் வெற்றித் திரைப்படம் `ஆயிரத்தில் ஒருவன்' திரையிடப்பட்டது. இந்தப் படத்தின் பெட்டியை மாணவர்கள் குதிரை வண்டியில் வைத்து, மேள தாளங்கள் முழங்க, ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டு வந்தனர்.

விஐடி சென்னையில் நடைபெற்ற `வைப்ரன்ஸ் 2026' சர்வதேச கலைத் திருவிழாவையொட்டி அமைக்கப்பட்டிருந்த டென்ட் கொட்டகை.

விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் படப் பெட்டியைப் பெற்றுக்கொண்டு, டென்ட் கொட்டகையை திறந்துவைத்தார். மாணவர்கள் நீண்ட வரிசையில் நின்று இலவச டிக்கெட் பெற்றனர். மேலும், மண் தரை மற்றும் நாற்காலிகளில் அமர்ந்து உற்சாகமாக திரைப்படத்தைக் கண்டு ரசித்தனர்.

தொடர்ந்து, தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. தற்போது முற்றிலுமாக அழிந்துவிட்ட, இளைய தலைமுறை முற்றிலும் அறிந்திராத டென்ட் கொட்டகை அனுபவத்தை விஐடி சென்னை மீட்டெடுத்துள்ளதாக துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் கூறினார்.

SCROLL FOR NEXT