கல்வி

மீனவ இளைஞர்களுக்கு யுபிஎஸ்சி தேர்வு பயிற்சி

செய்திப்பிரிவு

சென்னை: மீனவர் நலத்​துறை மற்​றும் சென்னை அகில இந்​திய குடிமைப்​பணி தேர்வு பயிற்சி மையம் சார்​பில் மீனவ சமு​தா​யத்தை சார்ந்த 20 பட்​ட​தாரி இளைஞர்​களுக்கு இந்​திய குடிமைப் பணி​களுக்​கான போட்​டித் தேர்​வுக்கு பயிற்சி வழங்​கப்​பட்டு வரு​கிறது.

இத்​திட்​டத்​தின்​கீழ் பயிற்சி பெற விரும்​புவோர் www.fisheries.tn.gov.in என்ற இணை​யதளத்​தில் விண்​ணப்​பப் படிவத்​தை​யும், அரசு வழி​காட்​டு​தல்​களை​யும் பதி​விறக்​கம் செய்து விண்​ணப்​பிக்​கலாம்.

நவ. 25-ம் தேதிக்குள்... பூர்த்தி செய்த விண்​ணப்​பங்​களை நீலாங்​கரை, கிழக்கு கடற்​கரை சாலை​யில் அமைந்​துள்ள மீனவர் நலத்​துறை உதவி இயக்​குநர் அலு​வல​கத்​துக்கு பதிவு அஞ்​சல் மூல​மாகவோ அல்​லது நேரடி​யாகவோ நவ.25-ம் தேதிக்​குள் அனுப்பி வைக்க வேண்​டும் என்று சென்னை மாவட்ட ஆட்சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT