சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ரீட்டா ஜான் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை பல்கலைக்கழகம் பல்வேறு துறைகள் வாயிலாக பல தரப்பட்ட பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டப் படிப்புகளையும், டிப்ளமோ மற்றும் முதுகலை டிப்ளமோ படிப்புகளையும் வழங்கி வருகிறது. தற்போது 2026-2027-ம் கல்வி ஆண்டு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 25-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
எனவே, முதுகலை, டிப்ளமோ மற்றும் முதுகலை டிப்ளமோ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தின் (www.unom.ac.in) வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.