சென்னை: பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராகப் பணியாற்றவும், இளநிலை ஆராய்ச்சிப் படிப்புக்கான உதவித்தொகை பெறவும் யுஜிசி நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்நிலையில், யுஜிசி நெட் தேர்வுகள் டிசம்பர் 14 முதல் 18-ம் தேதி வரையும், 21-ம் தேதியும் கணினிவழியில் நடத்தப்பட இருப்பதாக என்டிஏ அறிவித்துள்ளது.
தேர்வு மையம் தொடர்பான விவரங்கள் தேர்வு தொடங்குவதற்கு 21 நாட்களுக்கு முன்பாக இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.