கல்வி

7.36 லட்​சம் பேர் எழு​திய நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு

1.77 லட்சம் பட்டதாரிகள் தேர்ச்சி

செய்திப்பிரிவு

சென்னை: பல்​கலைக்​கழகங்​கள், கல்​லூரி​களில் உதவிப் பேராசிரிய​ராக பணிபுரிய​வும், இளநிலை ஆராய்ச்​சிப் படிப்​புக்​கான (ஜேஆர்​எஃப்) மத்​திய அரசின் உதவித் தொகை பெற​வும், பிஎச்டி மாணவர் சேர்க்​கைக்​கும் தேசிய தகு​தித் தேர்​வில் (நெட்) தேர்ச்சி பெற வேண்​டும். தேசிய தேர்​வு​கள் முகமை (என்​டிஏ) சார்​பில் ஜூன், டிசம்​பர் என ஆண்​டுக்கு 2 முறை கணினி வழியில் இந்த தேர்வு நடத்​தப்​படு​கிறது.

அதன்​படி, 2025-ம் ஆண்​டுக்​கான 2-ம் கட்ட யுஜிசி நெட் தேர்வு கடந்த டிச.31 முதல் ஜன.7-ம் தேதி வரை பாட​வாரி​யாக நடத்​தப்​பட்​டது. மொத்​தம் 9.94 லட்​சம் பட்​ட​தா​ரி​கள் விண்​ணப்​பித்த நிலை​யில், 7.36 லட்​சம் பேர் மட்​டுமே தேர்வு எழு​தினர்.

          

இந்​நிலை​யில், நெட் தேர்வு முடிவு​களை என்​டிஏ நேற்று முன்​தினம் இரவு வெளி​யிட்​டது. இதில், உதவிப் பேராசிரியர் பணிக்கு 54,713 பேர், ஜேஆர்​எஃப் உதவித் தொகைக்கு 5,108 பேர், பிஎச்டி படிப்​புக்கு ஒரு லட்​சத்து 17,058 பேர் என மொத்​தம் ஒரு லட்​சத்து 76,879 பட்​ட​தா​ரி​கள் (24%) தேர்ச்சி பெற்​றுள்​ளனர்.

தேர்வு முடிவு​களை ugcnet.nta.nic.in என்ற இணை​யதளத்​தில் அறிந்து கொள்​ளலாம். கூடு​தல் விவரங்​களை www.nta.ac.in என்ற தளத்​தில் அறிய​லாம் என்​று என்​டிஏ வெளி​யிட்ட அறி​விப்​பில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT