பிரதிநிதித்துவப் படம்

 
கல்வி

ஆதி திராவிடர் நலத்துறை பள்ளி ஆசிரியர்களுக்கு ஜூன் 10, 11, 12-ல் இடமாறுதல் கலந்தாய்வு

செய்திப்பிரிவு

சென்னை: ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு இணையவழியில் ஜூன் 10, 12 மற்றும் 13 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் வெளியிட்டுள்ள அரசாணை விவரம்: 2026-2027-ம் கல்வி ஆண்டில் ஆதி திராவிடர் நலப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களுக்கு பொது இடமாறுதல் கலந்தாய்வை ஜூன் 10 முதல் 12-ம் தேதி வரை இணையவழியில் நடத்த ஆதி திராவிடர் நல ஆணையருக்கு அனுமதி அளித்து ஆணையிடப்படுகிறது.

கலந்தாய்வின்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். பணி ஓய்வு, பணிநீக்கம் பதவி உயர்வு, மரணம் போன்ற காரணங்களினால் 31.5.2026 அன்றை நிலையில் ஏற்படும் புதிய பணியிடங்கள் மற்றும் நிர்வாக காரணங்களால் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு மட்டும் பொது மாறுதல்கள் செய்யப்பட வேண்டும்.

ஒரு ஆசிரியருக்கு மாறுதல் வழங்குவதற்காக எக்காரணம் கொண்டும் மற்றொரு ஆசிரியரை மாறுதல் செய்யக்கூடாது. கலந்தாய்வுக்கு 3 நாட்களுக்கு முன்னதாக காலியிடங்கள் பற்றிய முழு விவரமும் அனைத்து மாவட்ட ஆதிராவிடர் நல அலுவலகங்களின் தகவல் பலகையில் வெளியிடப்பட வேண்டும்.

மேலும் மாவட்ட தேசிய தகவல் மைய (நிக்) இணையதளத்திலும் வெளியிட வேண்டும். ஏற்கனவே இடமாறுதல் பெற்றவர்கள் மாறுதல் பெற்ற நாளில் இருந்து ஓராண்டு முடிந்த பின்னரே கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT