கல்வி

தொழில்நுட்ப பணிகள் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல்: டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது

செய்திப்பிரிவு

சென்னை: ஒருங்​கிணைந்த தொழில்​நுட்ப பணி​கள் தேர்​வுக்​கான கணினிவழி சான்​றிதழ் சரி​பார்ப்​புக்​கு, அனு​ம​திக்​கப்​பட்ட தேர்​வர்​களின் பட்​டியலை டிஎன்பிஎஸ்சி வெளி​யிட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக, டிஎன்பிஎஸ்சி செய​லா​ளர் பானோத் ம்ரு​கேந்​தர் லால் நேற்று வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: கடந்த 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடை​பெற்ற ஒருங்​கிணைந்த தொழில்​நுட்ப பணி​கள் தேர்​வில் (நேர்​காணல் இல்​லாத பதவி​கள்) விண்​ணப்​ப​தா​ரர்​கள் பெற்ற மதிப்​பெண் மற்​றும் தரவரிசை விவரங்​கள் கடந்த ஜன.23-ம் தேதி அன்று வெளி​யிடப்​பட்​டன.

இப்​ப​தவி​களுக்​கான கணினிவழித்​திரை சான்​றிதழ் சரி​பார்ப்​புக்​கு, மதிப்​பெண், தரவரிசை மற்​றும் இடஒதுக்​கீடு அடிப்​படை​யில், தற்​காலிக​மாக அனு​ம​திக்​கப்​பட்ட தேர்​வர்​களின் பதிவெண்​கள் அடங்​கிய பட்​டியல் தேர்​வாணை​யத்​தின் இணை​யதளத்​தில் (www.tnpsc.gov.in) வெளி​யிடப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

          
SCROLL FOR NEXT