கல்வி

உயிரி மருத்துவ ஆராய்ச்சிகள் தொடர்பாக ஐசிஎம்ஆர் உடன் தமிழ்நாடு அறிவியல், தொழில்நுட்ப கவுன்சில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

செய்திப்பிரிவு

சென்னை: உயிரி மருத்​து​வக் காப்​புரிமை​களை வணி​க​மாக்​கு​வது உள்​ளிட்​ட​வற்​றில் இணைந்து செயல்பட இந்​திய மருத்​துவ ஆராய்ச்சி கவுன்​சிலுடன் தமிழ்​நாடு அறி​வியல், தொழில்​நுட்ப கவுன்​சில் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் செய்​துள்​ளது.

இது தொடர்​பாக தமிழ்​நாடு மாநில அறி​வியல், தொழில்​நுட்ப கவுன்​சில் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: உயிரி மருத்​துவ ஆராய்ச்சி உரு​வாக்​கம், ஒருங்​கிணைப்​பு, ஊக்​கு​விப்பு ஆகிய பணி​களை இந்​திய மருத்​துவ ஆராய்ச்சி கவுன்​சில் (ஐசிஎம்​ஆர்) மேற்​கொண்டு வரு​கிறது.

          

அதே​போல, தமிழக அறி​வியல், தொழில்​நுட்​பத் துறை​யின் வளர்ச்​சிக்​காக தமிழ்நாடு மாநில அறி​வியல் தொழில்​நுட்ப கவுன்​சில் பணி​யாற்​றுகிறது. இந்த நிலை​யில், உயிரி மருத்​துவ ஆராய்ச்சி மற்​றும் புதிய கண்​டு​பிடிப்​பு​களைப் பாது​காத்து வலுப்​படுத்​து​வது தொடர்​பாக இந்த இரு அமைப்​பு​களும் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் செய்​துள்​ளன.

டெல்​லி​யில் உள்ள ஐசிஎம்​ஆர் தலைமை அலு​வல​கத்​தில் கடந்த 12-ம் தேதி நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில், ஐசிஎம்​ஆர் தலைமை இயக்​குநர் ராஜீவ் பஹல், தமிழ்நாடு மாநில அறி​வியல் தொழில்​நுட்ப கவுன்​சில் உறுப்​பினர், செயலர் எஸ்​.​வின்​சென்ட் ஆகியோர் புரிந்​துணர்வு ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட்டு ஆவணங்​களை பரி​மாறிக் கொண்​டனர்.

அப்​போது, நிதி ஆயோக் உறுப்​பினர் வி.கே.​பால், மருந்​துகள் துறை செயலர் மனோஜ் ஜோஷி, காப்​புரிமை​கள், வடிவ​மைப்​பு​கள், வர்த்தக முத்​திரைகள் தலைமை பதி​வாளர் உன்​னத் பண்​டிட், தேசிய மருத்​துவ ஆணை​யத் தலை​வர் அபிஜாத் ஷேத், டெல்லி எய்ம்ஸ் மருத்​து​வ​மனை இயக்​குநர் எம்​.சீனி​வாஸ், மத்​திய அறி​வியல், தொழில்​நுட்​பத் துறை​யின் மாநில திட்​டப் பணி​கள் பிரிவு தலை​வர் நிஷா மெண்​டி ரத்தா ஆகியோர் உடன் இருந்​தனர்.

இந்த ஒப்​பந்​தத்​தின்​படி, ஐசிஎம்​ஆர், தமிழ்நாடு அறி​வியல் தொழில்​நுட்ப கவுன்​சில் இணைந்து உயிரி மருத்​துவ ஆராய்ச்​சி, கண்​டு​பிடிப்​பு​கள், அறி​வு​சார் சொத்​துரிமை மூலம் பாது​காப்பை மேம்​படுத்த அறிவு பரி​மாற்​றங்​களை செய்​து​ கொள்ளும்.

உயிரி மருத்​துவக் கண்​டு​பிடிப்​பு​கள் தொடர்​பான அறி​வு​சார் சொத்​துரிமை​களின் செயல்​பாடு​களில் இரு அமைப்​பு​களும் பரஸ்​பரம் உதவும். முதலீட்​டாளர்​களு​டன் கண்​டு​ பிடிப்​பாளர்​களை இணைப்​பது, பயனுள்ள தொழில்​நுட்ப பரி​மாற்​றம், உயிரி மருத்​து​வக் காப்​புரிமை​களை வணி​க​மாக்​கும் நோக்​கத்​துடன் ஒத்​துழைப்பு அளிப்​பது ஆகிய பணி​களை​யும் மேற்​கொள்​ளும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT