கல்வி

பள்ளிகளில் 3 நாள் உடற்கல்வி வகுப்பு கட்டாயம்: புதிய கால அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் ராஜ்மோகன்

செய்திப்பிரிவு

சென்னை: பள்​ளி​களில் இனி வாரத்​தில் 3 நாட்​கள் உடற்​கல்வி வகுப்பு​கள் கட்​டா​யம் என பள்​ளிக்​கல்​வித்துறை அமைச்​சர் ராஜ்மோகன் தெரி​வித்​துள்​ளார்.

முதன்மை கல்வி அதி​காரி​கள் மற்​றும் மாவட்ட கல்வி அதி​காரி​களின் ஆலோ​சனைக் கூட்டம்அமைச்​சர் தலை​மை​யில் சென்னையில் நேற்று நடை​பெற்​றது. இதில், பள்​ளிக்​கல்​வித் துறை செயலர் ஜெ.இன்​னசென்ட் திவ்​யா, இயக்​குநர் (பொறுப்​பு) ந.ல​தா, தொடக்​கக் கல்வி இயக்​குநர் பி.ஏ.நரேஷ், அரசுத்​தேர்​வு​கள் இயக்​குநர் சுகன்யா மற்​றும் இணை இயக்​குநர்​கள் கலந்து கொண்​டனர்.இதில், பள்ளி மாணவர்​களுக்​கான திருத்​தப்​பட்ட புதிய கால அட்​ட​வணையை அமைச்​சர் வெளி​யிட்​டார்.

பின்​னர் அமைச்​சர் கூறிய தாவது: பள்ளி மாணவர்​களுக்கு உடற்​கல்வி மற்​றும் கல்வி இணை செயல்​பாடு​களுக்கு முக்​கி​யத்​து​வம் அளிக்​கும் வகை​யில் புதிய கால அட்​ட​வணை வெளி​யிடப்​பட்​டுள்​ளது. பள்​ளி​களில் ஒன்​றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை வாரத்​தில் 3 நாட்​கள் உடற்​கல்வி வகுப்​பு​கள் நடத்​தப்படும். 2 நாட்​கள் கல்வி இணை செயல்​பாடு வகுப்​பு​கள் நடத்​தப்​படும்.

அதே​போல் பிளஸ் 1 மற்​றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்​களுக்கு வாரத்​தில் 2 நாட்​கள் உடற்​கல்வி வகுப்​பு​களும், 2 நாட்​கள் கல்வி இணை செயல்​பாடு வகுப்​பு​களும் நடத்​தப்​படும். ஆசிரியர்​கள் தேவைப்​பட்​டால் கல்வி இணை செயல்​பாடு வகுப்​பு​களை உடற்​கல்வி வகுப்​புக்கு பயன்​படுத்​திக்​கொள்​ளலாம். உடற்​கல்வி வகுப்​பு​களைக் காட்​டாய​மாக ஒதுக்க வேண்டும்.

சாதி, மதம், நிறம், விளை​யாட்டு திறன், உயரம், குள்​ளம் என எதற்​காக​வும், எந்​தக் குழந்​தையை​யும் விளை​யாட்​டில் இருந்து ஒதுக்கி வைக்​கக்கூடாது. மாணவர்​கள் உடற்​கல்வி வகுப்​புக்குச் செல்ல ஆசிரியர்​கள் ஊக்குவிக்க வேண்​டும். மைதானங்​கள் இல்​லாத பள்​ளி​களுக்கு அதற்​கான வசதி​கள் ஏற்​படுத்​தித் தரப்​படும்.

அரசு பள்​ளி​களில் 6,000 உடற்​கல்வி ஆசிரியர் பணி​யிடங்​கள் உள்ளன. அதில் 2,000 பணி​யிடங்​கள் மட்​டுமே நிரப்​பப்​பட்​டுள்​ளன. இந்த காலிப்​பணி​யிடங்கள் ஆசிரியர் தேர்​வு வாரி​யம் மூலம் விரைவாக நிரப்​பப்​படும். இதுதொடர்​பான அறி​விப்பு விரை​வில்​ வெளி​யிடப்​படும்​. இவ்​வாறு அமைச்சர் கூறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT