கோப்புப் படம்: எஸ்.சத்தியசீலன்

 
கல்வி

பாடப் புத்தகம், கல்வி உதவிப் பொருட்களை பள்ளிக்கே கொண்டு வந்து வழங்க வேண்டும்: ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

செய்திப்பிரிவு

திருவாரூர்: தமிழகத்தில் அரசு உதவி​பெறும் பள்​ளி​களில் படிக்​கும் மாணவ, மாணவி​களுக்கு பாடப் புத்​தகங்​கள், சீருடை, நோட்​டுப் புத்​தகங்​கள் உட்பட கல்வி உதவிப் பொருட்​களை அரசு இலவச​மாக வழங்கி வரு​கிறது.

இதில், உயர்​நிலை மற்​றும் மேல்​நிலைப் பள்​ளி​களுக்கு அனைத்து கல்வி உதவிப் பொருட்​களும் மாவட்ட கல்வி அலு​வல​கம் மற்​றும் மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வல​கம் மூல​மாக நேரடி​யாக பள்​ளி​களுக்கே கொண்டு சென்று வழங்​கப்​படு​கின்​றன.

ஆனால், தொடக்​கப் பள்ளி மற்​றும் நடுநிலைப் பள்​ளி​களுக்கு அதன் தலைமை ஆசிரியர் மற்​றும் ஆசிரியர்​கள் தங்​களது சொந்த பொறுப்​பில் வட்​டாரக் கல்வி அலு​வல​கங்​களுக்கு சென்​று​தான் பெற்று வர வேண்​டும் என்ற நிலை உள்ளது.

இதன் காரண​மாக ஒவ்​வொரு ஒன்​றி​யத்​தி​லும் பல்​வேறு கிராமங்​களில் செயல்​படும் தொடக்க மற்​றும் நடுநிலைப் பள்​ளி​களின் ஆசிரியர்​கள் தங்​களது சொந்த பொறுப்​பில் பள்ளி வேலை​நாட்​களில் வட்​டாரக் கல்வி அலு​வல​கங்​களுக்கு சென்​று​வரும் நிலை உள்​ளது. இதன் காரண​மாக, மாணவர்​களுக்கு பாடம் நடத்த முடி​யாத சூழல் ஏற்​படு​வதுடன், தங்​களது சொந்த பணத்தை செல​வுசெய்து பாடப் புத்​தகங்​கள் உள்​ளிட்​ட​வற்றை வாங்க செல்​ல​வேண்டி உள்​ளது.

எனவே, பள்​ளி​களுக்கே பாடப் புத்​தகங்​கள் உள்​ளிட்ட கல்வி உதவிப் பொருட்​களை கொண்டு வந்து கொடுக்க வேண்​டும் என தொடக்க மற்​றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்​கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர். இதுகுறித்து அவர்​கள் கூறியது: வட்​டாரக் கல்வி அலு​வல​கத்​துக்கு தலைமை ஆசிரியர்​கள் அல்​லது ஆசிரியர்​கள் சென்று நோட்​டுப் புத்​தகங்​களை 3 பரு​வத்​துக்​கும் தனித்​தனி​யாக சென்று சொந்த செல​வில் வாங்கி வர வேண்டி உள்​ளது. கடந்த 3 ஆண்​டு​களாக இந்த நடை​முறை பின்​பற்​றப்​பட்டு வரு​கிறது. இதனால், ஆண்​டுக்கு 10 நாட்​கள் ஆசிரியர்​கள்பாடம் நடத்த முடி​யாமல் போகிறது.

எனவே, உயர்​நிலை, மேல்​நிலைப் பள்​ளி​களுக்கு பள்​ளிக் கல்​வித் துறையே தங்​களது சொந்த பொறுப்​பில் கல்வி உதவி பொருட்​களைக் கொண்டு வந்து வழங்​கு​வதைப்​போல, தொடக்க, நடுநிலைப் பள்​ளி​களுக்​கும் வழங்க வேண்​டும். இவ்​வாறு அவர்​கள் வலியுறுத்​தி உள்ளனர்​.

SCROLL FOR NEXT