கல்வி

கணினி வழியில் நீட் மறுதேர்வு உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இளநிலை மருத்​துவ படிப்​பு​களில் சேர்​வதற்​கான நீட் தேர்வு கடந்த மே 3-ல் நடை​பெற்​றது. இதன் வினாத்​தாள் கசிந்ததால் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

நீட் வினாத்​தாள் கசிவு விவ​காரத்தை சிபிஐ விசா​ரித்து வரு​கிறது. இதனிடையே ராஷ்டிரீய ஜனதா தள கட்​சி​யைச் சார்ந்த எம்.பி சுதாகர் சிங் உச்ச நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த மனு​வில், நீட் தேர்வு வினாத்​தாள் கசிவு உள்​ளிட்ட புகார்​களைத் தடுக்க ஜுன் 21-ம் தேதி நடை​பெறும் என்று அறிவிக்​கப்​பட்​டுள்ள நீட் மறு​தேர்வை கணினி வழி​யில் நடத்த தேசிய தேர்​வு​கள் முகமைக்கு உத்​தர​விட வேண்டும் என்று கோரி​யிருந்​தார்.

இந்த மனுவை உச்​சநீ​தி​மன்ற நீதிப​தி​கள் பி எஸ் நரசிம்​மா, அரவிந்த் குமார் ஆகியோர் அடங்​கிய அமர்வு நேற்று விசா​ரித்​தது. மனுவைப் பரிசீலித்த நீதிப​தி​கள், ‘‘தேசிய தேர்​வு​கள் முகமை பல்​வேறு பிரச்​னை​களைச் சந்​தித்து வரு​வ​தால் நீட் மறு​தேர்வை கணினி வழி​யில் நடத்த வேண்​டும் என்ற கேள்விக்கே இடமில்லை.

நீட் தேர்வு ஏற்​கெனவே ரத்து செய்​யப்​பட்​டு, மறு​தேர்வு அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. நீட் மறு​தேர்வை கணினி வழி​யில் நடத்த கோரிய மனு ஏற்​கெனவே தள்​ளு​படி செய்​யப்​பட்​டுள்​ளது. இதனால் இந்த மனு​வும் தள்​ளு​படி செய்​யப்​படு​கிறது’’ என்​றனர்​.

SCROLL FOR NEXT