கல்வி

பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு வாய்ப்பு: தொழிலாளர் மேலாண்மை பட்டப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: பிளஸ்-2 முடித்த மாணவர்​கள் தமிழக அரசு கல்வி நிறு​வனத்​தில் தொழிலா​ளர் மேலாண்மை பட்​டப் படிப்​பில் சேரலாம். இதற்கு மே மாதம் 18-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இது தொடர்​பாக தமிழ்​நாடு தொழிலா​ளர் கல்வி நிலை​யத்​தின் இயக்​குநரும், தொழிலா​ளர் நலத் துறை​யின் கூடு​தல் ஆணை​யரு​மான ஜி.சசிகலா நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழ்​நாடு தொழிலா​ளர் கல்வி நிலை​யம் சென்னை அம்​பத்​தூர், மின்​வாரிய சாலை, மங்​களபுரத்​தில் (அரசு ஐடிஐ பின்​புறம்) இயங்கி வரு​கிறது.

இங்கு பி.ஏ. (தொழிலா​ளர் மேலாண்​மை), எம்​.ஏ. (தொழிலா​ளர் மேலாண்​மை), பி.ஜி.டி.எல்​.ஏ.(தொழிலா​ளர் நிர்​வாகம்) (மாலை நேரப் படிப்​பு), டிஎல்ஏ (தொழிலா​ளர் சட்​டங்​களும் நிர்​வாக​வியல் சட்​ட​மும்) (வார இறு​தி) படிப்பு ஆகியவை நடத்​தப்​பட்டு வரு​கின்​றன.

இப்​படிப்​பு​கள் தொழிலா​ளர் நல அலு​வலர் பதவிக்கு பிரத்​யேக கல்​வித் தகு​தி​யாக தமிழ்​நாடு தொழிற்​சாலைகள் தொழிலா​ளர் நல அலு​வலர் விதி​களில் வரையறுக்​கப்​பட்​டுள்​ளது. இக்​கல்வி நிலை​யத்​தில் பயின்ற மாணவர்​கள் பல்​வேறு தொழிற்​சாலைகளில் மனிதவள மேம்​பாட்டு மேலா​ளர்​களாக பணிபுரிந்து வரு​கின்​றனர்.

மேலே குறிப்​பிடப்​பட்ட படிப்​பு​களுக்கு 2026-27-ம் கல்வி ஆண்​டுக்​கான மாணவர் சேர்க்​கைக்கு தற்​போது விண்​ணப்​பங்​கள் வழங்​கப்​பட்டு வரு​கின்​றன. பிளஸ்-2 முடித்த மாணவர்​கள் பி.ஏ. (தொழிலா​ளர் மேலாண்​மை) படிப்​பிலும், பட்​ட​தா​ரி​கள் எம்​.ஏ. (தொழிலா​ளர் மேலாண்​மை) படிப்​பிலும் முதுகலை டிப்​ளமா மற்​றும் டிப்​ளமா படிப்​பு​களி​லும் சேரலாம்.

இந்​நிலை​யத்​தில் தங்​கும் விடுதி வசதி இளநிலை மற்​றும் முது​நிலை பயிலும் மாணவர்​களுக்கு மட்​டும் இருக்​கிறது. விண்​ணப்​பக் கட்​ட​ணம் ரூ.200. எஸ்​சி, எஸ்டி வகுப்​பினருக்கு ரூ.100 மட்​டும். அவர்​கள் சாதிச் சான்​றிதழின் நகலை சமர்ப்​பிக்க வேண்​டும்.

விண்​ணப்​பத்தை தபாலில் பெற, உரிய விண்​ணப்​பக் கட்​ட​ணம் மற்​றும் தபால் கட்​ட​ணம் ரூ.50 ஆகிய​வற்​றுக்​கான வங்கி வரைவோலையை ‘The Director, Tamilnadu Institute ofLabour Studies, Chennai’ என்ற பெயரில் எடுத்து பதிவுத் தபால் அல்​லது விரைவு அஞ்​சல் அல்​லது கூரியர் மூலம் அனுப்ப வேண்​டும்.

விண்​ணப்​பிக்க கடைசி நாள் மே 18-ம் தேதி ஆகும். மேலும் விவரங்​கள் அறிய மாணவர் சேர்க்கை ஒருங்​கிணைப்​பாளர்​களான எம்​.​காம​ராஜ் (ஆராய்ச்சி அலு​வலர் - மொபைல் எண்: 8667754203)), எஸ்​.​கார்த்​தி​கேயன் (உத​விப் பேராசிரியர், மொபைல் எண்: 9965899822) ஆகியோரை தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT