அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான சிறப்பு ‘டெட்’ தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. சென்னை அயனாவரத்தில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுத வந்த ஆசிரியைகள். படம்: எஸ்.சத்தியசீலன்

 
கல்வி

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு ‘டெட்’ தேர்வு தொடக்கம்

முதல்தாள் தேர்வு கடினம் என தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: பணி​யிலுள்ள ஆசிரியர்​களுக்​கான சிறப்பு ‘டெட்’ தேர்​வில் முதல் தாள் தேர்வு வினாத்​தாள் மிக​வும் கடின​மாக இருந்​த​தாக தேர்​வர்​கள் தெரி​வித்​தனர்.

பள்​ளி​களில் ஆசிரிய​ராக பணிபுரிய மற்​றும் பதவி உயர்வு பெற ஆசிரியர்தகு​தித் தேர்​வில்​(‘டெட்’) தேர்ச்சி பெறு​வதை உச்ச நீதி​மன்​றம் கட்​டாய​மாக்​கியது. மேலும், இது​வரை தேர்ச்சி பெறாத ஆசிரியர்​கள் தேர்​வெழுதி தேர்ச்சி பெற​வும் உத்​தர​விட்​டது. இதையடுத்​து, தமிழகத்​தில் அரசு, அரசு உதவி​பெறும் பள்​ளி​களில் பணி​யாற்​றும் சுமார் 1.75 லட்​சம் ஆசிரியர்​கள் ‘டெட்’ தேர்​வில் தேர்ச்சி பெற வேண்​டிய நிலை ஏற்​பட்​டது. அதனால், ஆசிரியர்​களின் வசதிக்​காக நடப்​பாண்டு 3 சிறப்பு ‘டெட்’ தேர்​வு​கள் நடத்​தப்​படும் என்று பள்​ளிக் கல்​வித்துறை அறி​வித்​தது.

அதன்​படி, பள்​ளி​களில் பணி​யாற்றி வரும் ஆசிரியர்​களுக்​கான முதல் சிறப்பு ‘டெட்’ தேர்வு நேற்று தொடங்​கியது. தமிழகம் முழு​வதும் முதல் தாள் தேர்வை 59,535 ஆசிரியர்​கள் எழு​தினர். 1,851 பேர் தேர்​வில் பங்​கேற்​வில்​லை. சென்​னை​யில் 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் தேர்​வெழு​தினர். தேர்​வெழுத வந்த ஆசிரியர்​களை போலீ​ஸார் முறை​யான சோதனை​களுக்கு பிறகே தேர்வு மையத்​துக்​குள் செல்ல அனு​ம​தித்​தனர். அம்​பத்​தூரில் அமைக்​கப்​பட்​டிருந்த தேர்வு மையங்​களை பள்​ளிக்கல்​வித் துறை செயலர் பி.சந்​திரமோகன் நேரில் சென்று பார்​வை​யிட்​டார்.

இதற்​கிடையே, முதல்​தாள் தேர்வு வினாத்​தாள் கடின​மாக இருந்​த​தாக​வும், முந்​தைய ‘டெட்’ தேர்வு வினாத்​தாள்​களை ஒப்​பிடு​கை​யில், இதில் சவாலான கேள்வி​கள் கேட்​கப்​பட்​டிருந்​த​தாக​வும் ஆசிரியர்​கள் தரப்​பில் கூறப்​பட்​டது. இதைத் தொடர்ந்து 2-ம் தாள் இன்று (5-ம் தேதி) நடை​பெறுகிறது. இந்த தேர்வை 1,67,743 பேர் எழுதுகின்​றனர். தேவை​யான ஏற்​பாடு​களை ஆசிரியர் தேர்வு வாரி​யம் (டிஆர்​பி)மேற்​கொண்​டுள்​ளது.

SCROLL FOR NEXT