கல்வி

வெற்றி திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு ஐஐடி மூலம் திறன் பயிற்சிகள்

செய்திப்பிரிவு

சென்னை: சட்​டப்​பேர​வை​யில் நேற்று சிறப்பு திட்ட செய​லாக்​கத்​துறை தொடர்​பான அறி​விப்பை முதல்​வர் விஜய் சார்​பில் இந்து சமய அறநிலை​யத்​துறை அமைச்​சர் சி.ரமேஷ் வெளி​யிட்ட முக்​கிய அறி​விப்​பு​கள்: வெற்றி திறன் பயிற்சி திட்​டத்​தின் கீழ், வேலை​வாய்ப்​பற்ற இளைஞர்​களுக்கு தொழில் பாது​காப்​பு, தீ பாது​காப்​பு, தொழில்​சார் பாது​காப்பு, சுகா​தா​ரம், கட்​டு​மானபாது​காப்பு பயிற்​சிகள் அளிக்​கப்​பட்டு சர்​வ​தேச சான்​றிதழ்​கள் வழங்​கப்​படும்.

இதன் மூலம் இளைஞர்​களுக்கு உற்​பத்​தி, கட்​டு​மானம், உள்​கட்​டமைப்​பு, சரக்கு மற்​றும் போக்​கு​வரத்து, கிடங்​கு​கள், மருத்​து​வ​மனை​கள், தங்​கும் விடு​தி​கள், எரிசக்தி உள்​ளிட்ட துறை​களில் வேலை​வாய்ப்​பு​கள் உரு​வாக்​கப்​படும்.

நடப்பு கல்வி ஆண்​டில் உயர் மதிப்​பெண் எடுத்து தேர்ச்சி பெறும் மாணவர்​களுக்கு தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக்​கழகம் வாயி​லாக உலகளா​விய சான்​றிதழ் பயிற்​சிகள் அளிக்​கப்​படும். வெற்றி திறன் பயிற்சி திட்​டத்​தின் கீழ் கல்​லூரி மாணவர்​களுக்கு சென்னை ஐஐடி மூலம் சிறப்பு திறன் பயிற்​சிகள் வழங்​கப்​படும்.

இ்த்​திட்​டத்​தின் கீழ், அப்​ளைடு டேட்​டாபேஸ் சிஸ்​டம், அட்​வான்​ஸ்டு எலெக்ட்​ரானிக்ஸ் மேனுபேக்​சரிங் போன்ற சிறப்பு பயிற்சி படிப்​பு​கள் அளிக்​கப்​படும். வெற்றி திறன் பயிற்சி திட்​டத்​தின் கீழ், பொருளா​தா​ரத்​தில் பின்​தங்​கிய,வேலை​வாய்ப்பு இல்​லாத ஐடி பட்​ட​தா​ரி​களுக்கு சர்​வ​தேச சான்​றிதழ் பயிற்சி மூலம் உள்​நாடு, வெளி​நாடு​களில் வேலை​வாய்ப்​பு​கள் பெறு​வதற்கு திட்​டம் உரு​வாக்​கப்​படும்.

இதன்​மூலம் முன்​னணி உலகளா​விய தொழில்​நுட்ப நிறு​வனங்​களு​டன் இணைந்து சர்​வ​தேச அளவில் அங்​கீகரிக்​கப்​பட்ட சான்​றிதழ்​ படிப்​பு​கள்​ அளிக்​கப்​படும்​.

SCROLL FOR NEXT