பள்ளிக்கல்வித் துறை 
கல்வி

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட வினாத்தாள்

பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தொடக்​கப் பள்​ளி​களில் பயிலும் அறி​வு​சார் குறை​பாடு​கள் கொண்ட மாற்​றுத் திற​னாளி மாணவர்​களுக்கு எளிமைப்​படுத்​தப்​பட்ட ஆண்டு இறு​தித் தேர்வு வினாத்​தாள் வழங்​கப்பட உள்​ளது.

இதுகுறித்து தொடக்​கக் கல்​வித் துறை சார்​பில் மாவட்​டக் கல்வி அலு​வலர்​களுக்​கு அனுப்​பப்​பட்​டுள்ள சுற்​றறிக்​கை​: அரசு, அரசு உதவி பெறும் பள்​ளி​களில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அறி​வு​சார் குறை​பாடு​கள் கொண்ட மாற்​றுத்​திற​னாளி மாணவர்​களுக்கு கற்​றலில் அவர்​கள் நிலைக்​கேற்ப அரும்​பு, மொட்​டு, மலர் மற்​றும் அனைத்து பாடங்​களுக்கு எளிமைப்​படுத்​தப்​பட்ட எண்​ணும் எழுத்​தும் பயிற்சி ஏடு​கள், ஆசிரியர் கையேடு​கள் ஆண்டு இறு​தித் தேர்​வுக்கு வழங்​கப்​பட்​டுள்​ளது.

          

தொடர்ந்து இந்த மாணவர்​களுக்கு முதன்​முதலாக ஆண்டு இறு​தித் தேர்வு வினாத்​தாள்​கள் தயாரிக்​கப்​பட்டு அளிக்​கப்​பட​வுள்​ளது. இந்த வினாத்​தாளை அறி​வு​சார் குறை​பாடு​கள் கொண்ட மாற்​றுத் திற​னாளி மாணவர்​களுக்கு வழங்கி மதிப்​பீடு செய்து மதிப்​பெண் வழங்க வேண்​டும்.

இந்த வினாத்​தாள்​கள் வழங்​கப்பட வேண்​டிய மாணவர்​கள் விவரப் பட்​டியலை சம்​பந்​தப்​பட்ட வட்​டார வளமைய மேற்​பார்​வை​யாளர்​களிடம் பெற்​றுக் கொள்​ளலாம். தேவையெனில் இதுதொடர்​பாக சார்ந்த பள்​ளி​யின் சிறப்பு பயிற்​றுநர் ஆசிரியர்​களுக்கு உதவலாம்.

SCROLL FOR NEXT