கல்வி

தொடக்கக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர்கள் நேரடியாக பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெற முடியாது

புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்து அரசாணை வெளியீடு

செய்திப்பிரிவு

சென்னை: தொடக்​கக் கல்​வித் துறை​யில் இடைநிலை ஆசிரியர்கள் நேரடி​யாக பட்​ட​தாரி ஆசிரியர்​களாக பதவி உயர்வு பெறு​வதற்கு புதிய விதி​முறை​கள் அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

பள்​ளிக்​கல்​வித் துறை செயலர் ப.சந்​திரமோகன், தொடக்​கக் கல்வி சார்​நிலை பணி விதி​முறை​களில் செய்​யப்​பட்​டுள்ள பல்​வேறு மாற்​றங்​கள் தொடர்​பாக வெளி​யிட்​டுள்ள அரசாணை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தொடக்​கக் கல்​வித் துறை​யில் பணி​யாற்​றும் இடைநிலை ஆசிரியர்​கள் உரிய கல்​வித் தகு​தி​யும் தகு​தித் தேர்​வில் தேர்ச்​சி​யும் பெற்​றிருந்​தால் அவர்​கள் தொடக்​கப் ​பள்ளி தலைமை ஆசிரியர்​களாக பதவி உயர்வு பெறலாம்.

அதே​போல், தொடக்​கப்​பள்ளி தலைமை ஆசிரியர்​கள் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்ள கல்​வித்​தகுதி பெற்​றிருந்​தால் அவர்​களுக்கு பட்​ட​தாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்​கப்​படும். பட்​ட​தாரி ஆசிரியர்​கள் (தமிழ், ஆங்​கிலம் மற்​றும் இதர பாடங்கள்) நடுநிலைப் ​பள்ளி தலைமை ஆசிரியர்​களாக பதவி உயர்வு பெறலாம்.

பதவி உயர்​வுக்கு `டெட்' தேர்ச்சி கட்​டா​யம் ஆகும். வட்​டார கல்வி அலு​வலர் (பிஇஓ) பணி​யிடங்​கள் 50 சதவீதம் நேரடி நியமன முறை​யிலும் மீத​முள்ள 50 சதவீதம் நடுநிலைப்​பள்ளி தலைமை ஆசிரியர்​களைக் கொண்டு பதவி உயர்வு மூல​மாக​வும் நிரப்​பப்​படும்.

இதற்கு தமிழ், ஆங்​கிலம், கணிதம், இயற்​பியல், வேதி​யியல், தாவர​வியல், விலங்​கியல், வரலாறு, புவி​யியல் பாடங்​களில் ஏதேனும் ஒன்​றில் இளங்​கலை பட்​ட​மும் அதோடு பிஎட் பட்​ட​மும் பெற்​றிருக்க வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

இதற்​கிடையே, இடைநிலை ஆசிரியர்​கள் நேரடி​யாக பட்​ட​தாரி ஆசிரியர்​களாக பதவி உயர்வு பெறும் வகை​யில் விதி​களில் திருத்​தம் செய்ய வேண்​டும் என இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்​கள் இயக்​கம் வலி​யுறுத்​தி​யுள்​ளது.

இது தொடர்​பாக அந்த அமைப்​பின் மாநில பொதுச் செய​லா​ளர் ஜே.​ராபர்ட் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: புதிய விதி​களின்​படி, தொடக்​கப்​பள்ளி தலைமை ஆசிரியர்​கள் 5 ஆண்​டு​கள் பணி அனுபவம் பெற்ற பின்​னர் `டெட்' தேர்ச்சி தகு​தி​யுடன் பட்​ட​தாரி ஆசிரியர் ஆகலாம். இந்த தகு​தி​யுள்ள தொடக்​கப்​ பள்ளி தலைமை ஆசிரியர்​கள் இல்​லாத​போது நேரடி நியமன​மாக பட்​ட​தாரி ஆசிரியர்​கள் நியமிக்​கப்​படு​வார்​கள்.

இடைநிலை ஆசிரியர் தொடக்​கப்​பள்ளி தலைமை ஆசிரியர் ஆவதற்கு குறைந்​த​பட்​சம் 5 ஆண்​டு​கள் பணிபுரிய வேண்​டும். அந்த 5 ஆண்​டு​களுக்​குப் பிறகே பட்​ட​தாரி ஆசிரிய​ராக பதவி உயர்வு பெற முடி​யும். இந்த பணியை 5 ஆண்டு பூர்த்தி செய்​த​பிறகே நடுநிலைப்​பள்ளி தலைமை ஆசிரிய​ராக முடி​யும். இவ்​வாறு நடுநிலைப்​பள்ளி தலைமை ஆசிரியர் பதவியை எட்​டு​வதற்கு குறைந்​த​பட்​சம் 15 ஆண்​டு​கள் ஆகி​விடும்.

எனவே முன்​னர் இருந்​தது​போல் இடைநிலை ஆசிரியர்​களுக்கு தொடக்​கப்​ பள்ளி தலைமை ஆசிரியர் அல்​லது பட்​ட​தாரி ஆசிரியர் பதவி உயர்வை மீண்​டும் வழங்க வேண்​டும். இவ்​வாறு அவர்​ கூறி​யுள்​ளார்​.

SCROLL FOR NEXT