| படங்கள்: ம.பிரபு |

 
கல்வி

தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு: அரசு பள்ளிகளில் பாடப்புத்தகம், நோட்டு விநியோகம்

செய்திப்பிரிவு

சென்னை: கோடை விடு​முறை முடிவடைந்து தமிழகம் முழு​வதும் பள்ளிகள் நேற்று திறக்​கப்​பட்​டன. அரசு மற்​றும் அரசு உதவி பெறும் பள்​ளி​களில் மாணவர்​களுக்கு முதல் நாளி​லேயே பாடப்​புத்​தகம், நோட்டு உள்​ளிட்ட நலத்​திட்ட உதவி​கள் வழங்​கப்​பட்​டன.

கடந்த கல்வி ஆண்​டில் (2025-26) பள்​ளி​களில் பொதுத்​தேர்​வு​கள் முடிவடைந்​தவுடன், ஏப்​.17 முதல் கோடை விடு​முறைவிடப்​பட்டு ஜூன் 1-ம் தேதி பள்​ளி​கள் மீண்​டும் திறக்​கப்​படும் என அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இந்​நிலை​யில் கோடை வெயில் காரண​மாக பள்​ளி​கள் திறப்பு ஜூன் 4-ம் தேதிக்கு தள்​ளிவைக்​கப்​பட்​டது.

அதைத் தொடர்ந்து தமிழகம் முழு​வதும் பள்​ளிகள் நேற்று திறக்​கப்பட்டன. நீண்ட நாட்​களுக்​குப் பிறகு பள்​ளிக்கு வருகை தந்​த​தால் மாணவ -மாணவி​கள் உற்​சாகமாகக் காணப்​பட்​டனர்.

அவர்களுக்கு பூங்​கொத்​து, மலர்கள், இனிப்பு கொடுத்து ஆசிரியர்​கள் வரவேற்​றனர். அரசு மற்​றும் அரசு உதவி பெறும் பள்​ளி​களில் முதல் நாளி​லேயே பாடப்​புத்​தகம், நோட்​டு, புத்​தகப் பை உள்​ளிட்டவை வழங்​கப்​பட்​டன.

கோடை விடு​முறை முடிந்து பள்​ளிக்கு வருகை தந்த மாணவ-​மாணவி​களுக்கு முதல்​வர் விஜய், சமூக வலைத்​தளத்​தில் வெளி​யிட்ட வாழ்த்து செய்​தி​யில், “பு​திய கல்வி ஆண்​டின் முதல் நாளை, புதிய நம்​பிக்​கையோடு தொடங்​கும் என் அன்​பிற்​குரிய மாணவச் செல்​வங்​களுக்கு மனமார்ந்த வாழ்த்​துகள். கல்​வி​தான் உங்​கள் எதிர்​காலத்தை ஒளிமய​மாக்​கும் சக்​தி.

உயரிய கனவு​களை வளர்த்​துக் கொள்​ளுங்​கள், அதற்​கேற்ப கடின​மாக உழை​யுங்​கள். மகிழ்ச்​சி​யாக கற்​றுக்​கொள்​ளுங்​கள், வெற்றி உங்​களைத் தேடி வரும்” என குறிப்​பிட்​டுள்​ளார்.

அதே​போல், பாமக தலை​வர் அன்​புமணி ராம​தாஸ் வெளி​யிட்ட வாழ்த்​துச் செய்​தி​யில், “இந்த உலகில் அழி​யாத ஒரே செல்​வம் கல்வி மட்​டும்​தான். அந்த செல்​வம் ஊற்​றெடுக்​கும் மணற்​கேணி பள்​ளி​கள்​தான்.

கோடை விடு​முறை முடிந்து திரும்​பும் மாணவர்​களின் வாழ்க்​கை​யில் வசந்​தம் பிறக்​கட்​டும். குறிப்​பாக அரசு பள்​ளி​களில் வகுப்​புக்கு ஓர் ஆசிரியர் கிடைக்​கட்​டும்; அதன்​மூலம் அனை​வருக்​கும் கல்வி கிடைக்​கட்​டும்; தமிழகத்​தில் கல்வி சிறக்​கட்​டும்” என கூறி​யுள்​ளார்.

SCROLL FOR NEXT