கல்வி

சென்னையில் ஜூலை 25, 26 தேதிகளில் ரஷ்யக் கல்விக் கண்காட்சி

இந்திய மாணவருக்கு 8,000 எம்பிபிஎஸ் இடங்கள்

செய்திப்பிரிவு

சென்னை: ரஷ்யன் ஹவுஸ் – சென்னை சார்​பில் 2-வது அகில இந்​திய ரஷ்யக் கல்விக் கண்​காட்சி ஜூலை 25 மற்​றும் 26 தேதி​களில் நடை​பெறுகிறது.

சென்னை ரஷ்ய அறி​வியல் மற்​றும் கலாச்​சார மையத்​தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த கண்​காட்சி நடை​பெறும். இந்​தக் கல்விக் கண்​காட்​சி​யின் மூலம் இந்​திய மாணவர்​கள் மற்​றும் பெற்​றோர்​கள், ரஷ்​யா​வின் முன்​னணி அரசு, மாநில மற்​றும் கூட்​டாட்சி பல்​கலைக்​கழகங்​களின் பிர​தி​நி​தி​களை நேரடி​யாக சந்​தித்து எம்​பிபிஎஸ் மற்​றும் பிற உயர் கல்வி படிப்​பு​களுக்​கான ஸ்பாட் அட்​மிஷன் பெறும் அரிய வாய்ப்பு ஏற்​பட்​டுள்​ளது.

ரஷ்​யா​வில் மருத்​து​வம் பயிலும் இந்​திய மாணவர்​களின் எண்​ணிக்கை ஆண்​டு​தோறும் தொடர்ந்து அதி​கரித்து வரு​கிறது. இந்​திய தேசிய மருத்​துவ ஆணை​யம் வெளி​யிட்​டுள்ள வெளி​நாட்டு மருத்​து​வக் கல்விக்​கான புதிய விதி​முறை​களை முழு​மை​யாக பின்​பற்​றும் ஒரே வெளி​நா​டாக ரஷ்யா திகழ்​கிறது.

இதனால், மருத்​து​வம் படிக்க விரும்​பும் மாணவர்​களின் முதல் தேர்​வாக ரஷ்யா உரு​வெடுத்​துள்​ளது. கடந்த ஆண்டு 5,000 எம்​பிபிஎஸ் இடங்​கள் வழங்​கப்​பட்ட நிலை​யில், இந்த ஆண்டு இந்​திய மாணவர்​களுக்​காக சுமார் 8,000 இடங்​கள் ஒதுக்​கப்​பட்​டுள்​ள​தாக ரஷ்யா ஹவுஸ் தெரி​வித்​துள்​ளது.

SCROLL FOR NEXT