கோப்புப்படம்

 
கல்வி

டிசம்பரில் 2-வது சிறப்பு டெட் தேர்வு: நவ.19 வரை புதுச்சேரி ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம்

ஜெ.கு.லிஸ்பன் குமார்

சென்னை: டிசம்பரில் நடைபெறும் 2-வது சிறப்பு டெட் தேர்வுக்கு புதுச்சேரி ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க நவம்பர் 19-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் தற்போது பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கான 2-வது கட்ட சிறப்பு டெட் தேர்வுக்கான அறிவிப்பு அக்டோபர் 26-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களையும் அனுமதிக்குமாறு புதுச்சேரி அரசு அனுமதி கோரியது.

அதன் அடிப்படையில் புதுச்சேரி அரசு, அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் 2025-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதிக்கு முன்னர் நியமிக்கப்பட்டு தற்போது தொடர்ந்து பணியாற்றி வரும் தகுதியான ஆசிரியர்கள் 2-வது சிறப்பு டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

அவர்கள் இத்தேர்வுக்கு நவம்பர் 5 முதல் 19-ம் தேதி வரை ஆன்லைனில் (www.trb.tn.gov.in) விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்படுகிறது. சிறப்பு டெட் தேர்வு தொடர்பான கூடுதல் விவரங்கள் அறிவிக்கையில் வெளியிடப்பட்டுள்ளன என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT