கோவை: கோவையில் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வனவியல், வேளாண் உயிரித் தொழில்நுட்பம், சமூக அறிவியல், உணவுத் தொழில்நுட்பம், வேளாண் வணிகம், சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் வேளாண் அறிவியலின் பிறதுறைகள் உள்ளிட்ட 30 பிரிவு களில் முனைவர் பட்டப்படிப்பை வழங்குகிறது.
இதன்படி 2026–27 கல்வியாண்டுக்கான இணையவழி மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https:/admissionsatpgschool.tnau.ac.in/ இணையதளம் மூலம் அக்.23க்குள் விண்ணப்பிக்கலாம்.கூடுதல் விவரங்களை pgadmission@tnau.ac.in மின்னஞ்சல் மூலமும் 94890 56710 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.