கல்வி

கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் எம்.ஏ. கிளினிக்கல் சைக்காலஜி படிப்பு தொடங்க அனுமதி

செய்திப்பிரிவு

சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்​து​வ​மனை​யில், எம்.ஏ. கிளினிக்​கல் சைக்​காலஜி என்ற புதிய படிப்பை வரும் கல்வி ஆண்​டில் தொடங்க, தமிழக அரசு அனு​மதி வழங்​கி​யுள்​ளது.

இது தொடர்​பாக, சுகா​தா​ரத்​துறை செயலர் பி.செந்​தில்​கு​மார் வெளி​யிட்​டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்​து​வ​மனை​யில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் எம்.ஃபில். கிளினிக்​கல் சைக்​காலஜி என்ற படிப்பு நடத்​தப்​பட்டு வரு​கிறது.

          

இந்த படிப்​புக்கு பதிலாக எம்.ஏ. கிளினிக்​கல் சைக்​காலஜி என்ற பெயரில் புதிய படிப்பை வழங்​கு​மாறு இந்​திய மறு​வாழ்​வுக் கவுன்​சில், கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்​து​வ​மனையை அறி​வுறுத்​தி​யது.

ஆண்டுக்கு 18 மாணவர்கள்

அதன் பேரில், வரும் கல்வி ஆண்டு (2026-2027) எம்.ஏ. கிளினிக்​கல் சைக்​காலஜி படிப்பை தொடங்​கும் வகை​யில், மருத்​துவ கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​குநர் மூல​மாக, கீழ்ப்பாக்கம் மனநல மருத்​து​வ​மனை இயக்​குநரின் கருத்​துரு அரசுக்கு வரப்​பெற்​றது.

அக்​கருத்​துருவை ஏற்று கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்​து​வ​மனை​யில் 2026-27-ம் கல்வி ஆண்​டில் எம்.ஏ. கினிக்​கல் சைக்​காலஜி படிப்பை தொடங்​க​வும், ஆண்​டு​தோறும் 18 மாணவர்​களை சேர்த்​துக் கொள்​ள​வும் அனு​மதி அளித்து அரசு ஆணை​யிடு​கிறது.

இப்​பு​திய படிப்​புக்கு இந்​திய மறு​வாழ்​வுக் கவுன்​சில் மற்​றும் தமிழ்​நாடு டாக்​டர் எம்​ஜிஆர் மருத்​துவ பல்​கலைக் கழகத்​திடம் உரிய அனு​மதி பெறப்பட வேண்​டும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT