கல்வி

பொறியியல் படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் சிறப்பு பிரிவினருக்கு ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியது

தற்காலிக ஒதுக்கீட்டை இன்று உறுதிசெய்ய வேண்டும்

செய்திப்பிரிவு

சென்னை: பொறியியல் படிப்​பில் அரசுப் பள்ளி மாணவர்​களுக்​கான 7.5 சதவீத உள்​ஒதுக்​கீட்​டில் சிறப்பு பிரி​வினருக்​கான ஆன்​லைன் கலந்​தாய்வு நேற்று தொடங்​கியது.

இப்​பிரி​வில் மாற்​றுத் திற​னாளி​களுக்​கான 750 இடங்​களுக்கு 159 பேரும், விளை​யாட்டு வீரர்​களுக்​கான 38 இடங்​களுக்கு 525 பேரும், முன்​னாள் ராணுவத்​தினரின் குழந்​தைகளுக்​கான 11 இடங்​களுக்கு 14 பேரும் தரவரிசை​யில் இடம்​பெற்​றுள்​ளனர்.

மாணவர்​கள் தாங்​கள் விரும்​பும் கல்​லூரி மற்​றும் பாடப் பிரிவை தேர்வு செய்ய நேற்று காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை அவகாசம் அளிக்​கப்​பட்​டது. இதைத் தொடர்ந்​து, அவர்​களுக்கு தற்​காலிக ஒதுக்​கீடு வழங்​கப்​படும். அதை அவர்​கள் இன்று (14-ம் தேதி) மாலை 5 மணிக்​குள் உறு​தி​செய்ய வேண்​டும்.

அவர்​களுக்​கான கல்​லூரி ஒதுக்​கீட்டு ஆணை நாளை (15-ம் தேதி) காலை 7 மணிக்கு வெளி​யிடப்​படும். அந்த ஆணையை மாணவர்​கள் ஆன்​லைனிலேயே பதி​விறக்​கம் செய்து கொள்​ளலாம்.

இதைத் தொடர்ந்​து, சிறப்பு பிரி​வினருக்​கான பொதுக் கலந்​தாய்வு ஜூலை 15 (நாளை) முதல் 18-ம் தேதி வரை இணை​ய​வழி​யில் நடை​பெறும். அதன்​பிறகு, பொதுப் பிரி​வினருக்​கான கலந்​தாய்வு இணை​ய​ வழி​யில் ஜூலை 20-ம் தேதி தொடங்கி ஆக.30-ம் தேதி வரை தொடர்ந்து 40 நாட்​கள் நடை​பெற உள்​ளது.

துணை கலந்​தாய்வு உள்​ளிட்ட அனைத்து நடை​முறை​களும் செப்​.10-ம் தேதிக்​குள் முடிக்​கப்​படும் என்று தொழில்​நுட்​பக்​ கல்​வி இயக்​ககம்​ தெரிவித்​துள்​ளது.

SCROLL FOR NEXT