கல்வி

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு விடைத்தாள்களை ஆன்லைனில் திருத்தும் புதிய முறை அமல்

செய்திப்பிரிவு

சென்னை: சிபிஎஸ்இ12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்​களின் விடைத்​தாள்​கள் ஆன்​லைன் வாயி​லாக திருத்​தப்​படும் என்று சிபிஎஸ்இ அறி​வித்​துள்​ளது.

மத்​திய இடைநிலைக் கல்வி வாரி​யத்​தின் (சிபிஎஸ்இ) கீழ் நாடு முழு​வதும் 29 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பள்​ளி​கள் இயங்​கு​கின்​றன. தேசிய கல்விக்கொள்​கை​யின்​படி தேர்வு முறை​களில் பல்​வேறு மாற்​றங்​களை சிபிஎஸ்இ மேற்​கொண்டு வரு​கிறது. அந்​தவகை​யில் நடப்​பாண்டு முதல் பத்​தாம் வகுப்​புக்கு மட்​டும் 2 பொதுத்​தேர்​வு​கள் நடத்​தப்பட உள்​ளன.

          

முதல்​கட்​ட​மாக பிப்​ர​வரி மாத​மும், 2-ம் கட்​ட​மாக மே மாதமும் தேர்​வு​கள் நடை​பெற இருக்​கின்றன. முதல் தேர்வை வழக்​க​மான முறை​யில் அனைத்து மாணவர்​களும் எழுத வேண்​டும். 2-ம் கட்​டத்​தேர்வை விரும்​பிய​வர்​கள் எழுதலாம். மதிப்​பெண் அதி​கரிக்க விரும்​பு​கிறவர்​கள், முதல் தேர்​வில் பங்​கேற்க முடி​யாதவர்​கள் அல்​லது தேர்ச்சி பெற முடி​யாதவர்​கள் இந்த வாய்ப்பை பயன்​படுத்தலாம்.

இதுத​விர விடைத்​தாள் திருத்​தம் மற்​றும் வினாத்​தாள் முறை​யிலும் சில திருத்​தங்​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. அதன்​படி 10-ம் வகுப்​பில் அறி​வியல் பாடம் உயி​ரி​யியல், வேதி​யியல் மற்​றும் இயற்​பியல் எனவும், சமூக அறி​வியல் பாடம் வரலாறு, புவி​யியல், அரசி​யல் அறி​வியல் மற்றும் பொருளா​தா​ரம் எனவும் பிரிக்​கப்​பட்​டுள்​ளன. இதையடுத்து மாணவர்​கள் அந்​தந்தபிரி​வில் மட்​டுமே அதற்கான விடையை எழுத வேண்​டும். மாற்றி எழு​தி​னால் அது கணக்​கில் கொள்​ளப்​ப​டாது. மேலும், அந்​தந்த பாடத்​தின் ஆசிரியர்​களே திருத்​தம் செய்​வார்​கள்.

அடுத்​த​தாக இந்​தாண்டு முதல் பிளஸ் 2 மாணவர்​களின் விடைத்​தாள்​கள் முதன் முறையாக டிஜிட்​டல் வழி​யில் திருத்​தம் செய்​யப்பட உள்​ளன. அதாவது, விடைத்​தாள்​களை ஆசிரியர்​கள் கணினி திரையில் பார்த்து திருத்தி மதிப்​பெண் வழங்​கு​வார்​கள். இதன்​மூலம் தவறுகளின்றி விரை​வாக மதிப்​பீடு செய்​வும் முடிவு​களையும் விரை​வாக வெளியிடவும் முடியும் என சிபிஎஸ்​இ வட்​டாரங்​கள்​ தெரிவித்​தன.

SCROLL FOR NEXT