கல்வி

மலைமேல் ஏறி படித்து நீட் தேர்வில் வென்ற ஒடிசா சகோதரிகள்!

இணைய தொடர்பு குறைவால்...

செய்திப்பிரிவு

மயூர்பஞ்ச்: வீட்​டில் மொபைல் நெட்​வொர்க் சரியாக கிடைக்காததால், மலை மீது ஏறிச் சென்று படித்த ஒடிசாவைச் சேர்ந்த சகோதரிகள், நீட் தேர்​வில் வெற்றி பெற்று அனைவரையும் வியக்க வைத்​துள்​ளனர்.

ஒடிசா மாநிலம் மயூர்​பஞ்ச் மாவட்​டத்​தின் மஹுலாபங்கா கிராமத்​தைச் சேர்ந்த ஏழை விவ​சா​யி​யான கவுரங்க கத்​துவா மற்றும் அங்​கன்​வாடி உதவி​யாள​ரான சுனிதா தம்​ப​தி​யின் மகள்கள் யாஜ்ஞசேனி மற்​றும் திவ்​யசேனி. வறுமை காரண​மாக, தனி​யார் பயிற்சி மையங்​களுக்​குச் செல்​லாமல் சுய முயற்​சி​யாலும் ஆன்​லைன் வகுப்​பு​கள் மூல​மாக​வும் படித்​து, 2026-ம் ஆண்டு நீட் தேர்​வில் தேர்ச்சி பெற்​று் சாதனை படைத்​துள்​ளனர்.

தங்​கள் பகு​தி​யில் போதிய மொபைல் நெட்​வொர்க் சரியாக கிடைக்காத​தால், அரு​கில் உள்ள மலைக்​குன்​றின் மீது ஏறி நள்​ளிரவு வரை மொபைலிலேயே படித்​தனர். இதில் அக்கா யாஜ்ஞசேனி தனது 3-வது முயற்​சி​யிலும், அவரது வழி​காட்​டு​தலில் படித்த தங்கை திவ்​யசேனி முதல் முயற்​சி​யிலும் நீட் தேர்​வில் தேர்ச்சி பெற்​றுள்​ளனர். இந்த சகோ​தரி​களின் லட்​சி​யம், எதிர்​காலத்​தில் சிறந்த மருத்​து​வர்​களாக உரு​வெடுத்து ஏழை எளிய மக்களுக்கு சேவை ஆற்​று​வது மட்​டுமே ஆகும்​.

SCROLL FOR NEXT