கல்வி

ஸ்கிரைப் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்: மாற்றுத் திறனாளிகளுக்கு என்டிஏ அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: நாடு முழு​வதும் உள்ள மத்​திய பல்​கலைக்​கழகங்​கள் மற்​றும் அதன்​கீழ் இயங்​கும் கல்​லூரி​களில் இளநிலை, முது​நிலை பட்​டப்​படிப்​பு​களில் சேர பல்​கலைக்​கழக பொது நுழைவுத் தேர்​வில் (க்​யூட்) தேர்ச்சி பெறவேண்​டும். வரும் கல்​வி​யாண்​டில் (2026-27) இளநிலை படிப்​பு​களுக்​கான க்யூட் நுழைவுத் தேர்வு மே 11 முதல் 31-ம் தேதி வரை நடத்​தப்பட உள்​ளது. இதற்​கான இணை​யதள விண்​ணப்​பப் பதிவு கடந்த ஜன. 3-ல் தொடங்கி பிப். 26-ம் தேதி வரை நடை​பெற்​றது.

இந்​நிலை​யில் மாற்​றுத் திற​னாளி மாணவர்​கள் தேர்வு எழுது​வதற்​கான உதவி​யாளர் (ஸ்​கிரைப்) விவரங்​களை பதிவு செய்ய வேண்​டுமென என்​டிஏ அறி​வித்​துள்​ளது. இதுகுறித்து தேசிய தேர்வு முகமை (என்​டிஏ) வெளி​யிட்ட அறி​விப்​பு: மாற்​றுத் திற​னாளி மாணவர்​களில் தேர்​வெழுத உதவி​யாளர் (ஸ்​கிரைப்) தேவைப்​படு​பவர்​கள், தங்​கள் ஸ்கிரைப் குறித்த விவரங்​களை /cuet.nta.nic.in/ எனும் இணை​யதளத்​தில் மே 5-ம் தேதிக்​குள் சமர்ப்​பிக்க வேண்​டும். இதில் ஏதேனும் சிரமங்​கள் இருப்​பின் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்​லது cuet-ug@nta.ac.in என்ற மின்​னஞ்​சல் வழி​யாக தொடர்பு கொள்​ளலாம். மேலும், இதுகுறித்த கூடு​தல் விவரங்​களை /www.nta.ac.in/ என்ற வலைதளத்​தில் அறிய​லாம். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT