கல்வி

சார்-பதிவாளர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட பதவிகளுக்கு குரூப்-2 தேர்வு அறிவிப்பு நாளை வெளியாகிறது

காலியிடங்கள் அதிகம் இருக்கும் என தேர்வர்கள் எதிர்பார்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்​-2, குரூப்-2 ஏ தேர்வுக்கான அறி​விப்பு நாளை (11-ம் தேதி) வெளி​யிடப்​படு​கிறது. காலிப்​பணி​யிடங்​கள் அதிக எண்​ணிக்​கை​யில் இருக்​கும் என தேர்​வர்​கள் எதிர்​பார்க்​கின்​றனர்.

சார்​-ப​தி​வாளர்,, தலை​மைச் செயலக உதவி பிரிவு அலு​வலர், நகராட்சி ஆணை​யர் (கிரேடு-2), தொழிலா​ளர் நலஉதவி ஆய்​வாளர், இளநிலை வேலை​வாய்ப்பு அலு​வலர், சிறைத்​துறை நன்​னடத்தை அலு​வலர், கூட்​டுறவு சங்​கங்​களின் முது​நிலை ஆய்​வாளர், கைத்​தறி ஆய்​வாளர், முது​நிலை வரு​வாய் உதவி​யாளர், பேரூ​ராட்சி செயல் அலு​வலர், பல்​வேறு அரசு துறை​களின் உதவி​யாளர் உள்​ளிட்ட பதவி​களை நிரப்ப ஒருங்​கிணைந்த குரூப்​-2, குரூப்​-2-ஏ தேர்வை டிஎன்பிஎஸ்சி நடத்​துகிறது. கடந்த 2025-ம் ஆண்டு 595 காலிப்​பணி​யிடங்​களை நிரப்​பும் வகை​யில் குரூப்​-2, குரூப்-2ஏ தேர்​வுக்​கான அறி​விப்பு வெளி​யிடப்​பட்​டது. பி்ன்​னர் காலி​யிடங்​கள் 540-ஆக குறைக்​கப்​பட்​டன.

டிஎன்​பிஎஸ்சி 2026 ஆண்​டுக்​கான தேர்வு அட்​ட​வணை​யின்​படி இந்த ஆண்டு குரூப்​-2, குரூப்-2 ஏ தேர்​வுக்​கான அறி​விப்பு ஆகஸ்ட் 11-ம் தேதி வெளி​யிடப்​பட்டு, முதல்​கட்ட தேர்​வான முதல்​நிலைத்​தேர்வு அக்​டோபர் 25-ம் தேதி நடத்​தப்​பட வேண்டும்.

வரு​டாந்​திர தேர்வு அட்​ட​வணை​யில் குறிப்​பிட்​டுள்​ள​வாறு அனைத்து தேர்​வு​களுக்​கும் குறித்த தேதி​யில் அறி​விப்பு வெளி​யிடப்​பட்டு தேர்​வு​கள் நடத்​தப்​படும் என டிஎன்​பிஸ்சி தலை​வர் எஸ்​.கே.பிர​பாகர் ஏற்​கெனவே அறி​வித்​துள்​ளார்.

அதன்​படி, ஒருங்​கிணைந்த குரூப்​-2, குரூப்-2 ஏ தேர்​வுக்​கான அறி​விப்பு நாளை (11-ம் தேதி) டிஎன்​பிஎஸ்சி இணை​யதளத்​தில் வெளி​யிடப்​படு​கிறது.

சார்​-ப​தி​வாளர், தலை​மைச் செயலக உதவி பிரிவு அலு​வலர், தொழிலா​ளர் நல உதவி ஆய்​வாளர், முது​நிலை வரு​வாய் உதவி​யாளர் உள்​ளிட்ட வழக்​க​மான பதவி​களு​டன் பல்​கலைக்​கழக உதவி​யாளர், இளநிலை உதவி​யாளர், மாநகர தமிழ்​நாடு மின்​சார வாரி​யம், அரசு போக்​கு​வரத்​துக்​கழக இளநிலை உதவி​யாளர் உள்​ளிட்ட புதிய பதவி​களும் முதல்​முறை​யாக இடம்​பெறலாம் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

அரசு துறை​களில் 2 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட காலிப்​பணி​யிடங்​கள் இருந்து வரும் நிலை​யில், தவெக தலை​மை​யில் புதிய அரசு பொறுப்​பேற்​றிருப்​ப​தால் காலிப்​பணி​யிடங்​கள் அதிக எண்​ணிக்​கை​யில் நிரப்பப்படும் என டிஎன்​பிஎஸ்சி தேர்​வர்​கள் மிகுந்த எதிர்​பார்ப்​பில் உள்​ளனர்.

டிஎன்​பிஎஸ்சி நடத்​தும் போட்​டித்​தேர்​வு​களில் குரூப்​-4, குரூப்-2 தேர்​வு​களுக்​குத்​தான் அதி​க​மானோர் விண்​ணப்​பிக்​கிறார்​கள்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT