கோப்புப்படம்

 
கல்வி

பள்ளிகளில் விரைவில் ‘உடற்கல்வி பிரிவு’ என்ற புதிய பாட திட்டம்

செய்திப்பிரிவு

மதுரை: மாணவர்​கள் விளை​யாட்​டுத் துறை​யில் சிறந்து விளங்க புதி​தாக ‘உடற்​கல்வி பிரிவு’ என்ற புதிய பாடத்​திட்​டத்தை உரு​வாக்​கத் திட்​ட​மிட்​டுள்​ள​தாக பள்​ளிக் கல்​வித்​துறை இயக்​குநர் எஸ்.கண்​ணப்​பன் தெரி​வித்தார்.

மதுரை கலைஞர் நூற்​றாண்டு நூல​கத்​தில் நேற்று பள்​ளிக்​கல்​வித் துறை சார்​பில் 10, பிளஸ் 2 வகுப்பு தேர்வு முடிவு​கள் பகுப்​பாய்வு மற்​றும் சிறப்பு வழி​காட்டு நெறி​முறை​கள் கூட்​டம், மாவட்ட முதன்​மைக்​கல்வி அலு​வலர் எஸ்​.த​யாளன் தலை​மை​யில் நடை​பெற்​றது. இக்​கூட்​டத்​தில் பள்​ளிக்​கல்​வித்​துறை இயக்​குநர் எஸ்​.கண்​ணப்​பன் பேசி​ய​தாவது:

தமிழகத்​தில் பள்​ளிக் கல்​வித்​துறை சார்​பில் 1, 2, 3-ம் வகுப்பு மாணவர்​களுக்கு சில மாற்​றங்​களு​டன் பாட நூல்​கள், பயிற்​சிப் புத்​தகம் இரண்​டை​யும் இணைத்து புதிய பாட நூல்கள் வழங்​கப்​படு​கின்​றன. குழந்​தைகள் மகிழ்ச்​சி​யாக கற்​றுக் கொள்​ளும் வாய்ப்பு ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

அதனடிப்​படை​யில் அடுத்​தாண்​டில் 4 முதல் 8 வகுப்​புக்​கும், அடுத்து 9 முதல் பிளஸ் 2 வரை பாடத் திட்​டம் மாற்றி வடிவ​மைக்​கப்பட உள்​ளது. தலைமை ஆசிரியர்​களுக்​குத்​தான் தலை​மைப்​பண்பு இருக்​கிறது. பள்​ளி​களில் ஆசிரியர்​களின் பிரச்​சினை​கள், மாணவர்​களின் பிரச்​சினை​களை நெகிழ்​வுத் தன்​மையோடு சமநிலைப்​படுத்தி வழி நடத்​தி​னாலே பள்​ளி​கள் சாதனைப் பள்​ளி​களாக மாறும்.

ஆசிரியர்​கள் மாணவர்​களிடையே விளை​யாட்​டில் ஆர்​வத்தை ஏற்​படுத்த வேண்​டும். விளை​யாட்​டில் ஆர்​வ​முடைய மாணவர்​கள் படிப்​பில் தொய்வு இருக்​கும். அம்​மாணவர்​களை மட்​டம் தட்​டா​மல் ஊக்​கப்​படுத்த வேண்​டும். மாணவர்​கள் விளை​யாட்​டுத்​துறை​யில் சிறந்து விளங்க ‘உடற்​கல்வி பிரிவு’ (Physical Education Group) என்ற புதிய பாடத் திட்​டத்தை உரு​வாக்​கத் திட்​ட​மிட்​டுள்​ளோம். மாணவர்​களின் தனித்​திறன்​களை கண்​டறிந்து வெளிக்​கொணர வேண்​டும். ஆசிரியர்​கள் தூண்​டு​கோலாக இருந்​தாலே போதும். பெற்​றோர் எந்​தக் குழந்​தையை​யும் ஒப்​பிடக் கூடாது. இவ்​வாறு பேசி​னார்.

SCROLL FOR NEXT