கல்வி

புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர் கணேசனுக்கு தேசிய நல்லாசிரியர் விருது

நாடகம் வாயிலாக மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நாடு முழுவதும் பணிபுரியும் சிறந்த ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

அதன்படி, 2026-ம் ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருது பெறுவோ ரின் பட்டியல் நேற்று வெளி யிடப்பட்டது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து 48 ஆசிரியர்கள் இதில் இடம் பெற்றுள்ளனர். மத்திய அரசு ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினத்தன்று இந்திய அளவில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இந்த விருதுகளை வழங்கி வருகிறது.

இதில், புதுச்சேரியில் இருந்து மேட்டுப்பாளையம் விடுதலை வீரர் சீனுவாசன் அரசு உயர்நிலைப் பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் கணேசன் விருதுக்கு தேர்வாகியுள்ளார். இதுதொடர்பாக ஆசிரியர் கணேசன் கூறியதாவது: நான் 35 ஆண்டுகளாக அறிவி யல் ஆசிரியராக இருக்கிறேன். ஆரோவில் நிர்வாகத்தில் 9 ஆண்டுகள் ஆசிரியராக இருந்தேன்.

புதுச்சேரி அரசின் பள்ளிக் கல்வித்துறையில் 26 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளது. பத்தாம் வகுப்பு வரை அறிவியல் பாடங்கள் எடுக்கிறேன். கடந்த 2022-ல் மாநில நல்லாசிரியர் விருது பெற்றேன். தற்போது தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளேன். எனக்கு சிறுவயதில் இருந்து நாடகம், இலக்கியத்தில் ஆர்வ முண்டு. நாவல், நாடகங்களை எழுதி வருகிறேன். ‘நடு கூத்தன்’ என்ற நாடக நூல் உள்பட 9 நூல்களை எழுதியுள்ளேன்.

டெல்லி தேசிய நாடக விழாவிலும், புதுச்சேரி பல் கலைக்கழக நிகழ்த்துக் கலை துறையிலும் ‘நடு கூத்தன்’ நூல் நாடக வடிவம் பெற்றுள்ளது. சங்கீத் நாடக அகாதெமியில் எனது நாடகம் தேர்வாகியுள்ளது. எனக்கும் நாடகத்தில் நடித்த அனுபவமுள்ளது. இந்த ஆர்வத்தின் நீட்சியாக, மாணவர்களுக்கு அறிவியல் பாடத்தை நாடகமாய் வடிவமைத்து, நடத்தி வருகிறேன்.

எங்களின் குழந்தைகள் பிரான்ஸ் பல் கலைக்கழக அறிவியல் விருது, சர்வதேச அறிவியல் போட் டிகள், மாநில அளவிலான அறிவியல் போட்டிகள் என பலவற்றில் வென்றுள்ளனர்.. தேசிய குழந்தைகள் அறிவியல் காங்கிரஸில் மாணவர்களின் 23 திட்டங்களுக்கு வழிகாட்டி ஆசிரியராகவும் இருந் தேன். இவ்விருது எனது உழைப் புக்கான அங்கீகாரம் என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT